

கொல்கத்தாவுக்கு கரோனா அறிகுறியுடன் வந்த தென் அமெரிக்க நாடான பெரு நாட்டு இளைஞர் பெலியகட்டா ஐடி மருத்துவமனையின் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார்.
வைரஸ் பாதிப்பை தடுக்க நாடு முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. விமான நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவக் குழுவினர், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக பரிசோதனை செய்கின்றனர். கோவிட்-19 வைரஸ் அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து பல்வேறு மாநில அரசுகளும் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் இந்தியா வந்துள்ள பெரு நாட்டு இளைஞர் ஒருவரு பெலியகட்டா ஐடி மருத்துவமனையின் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரி கூறியதாவது:
தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டைச் சேர்ந்த 27 வயது நபர் பெருநாட்டவருக்கு ஆஸ்துமா மற்றும் நாட்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி உள்ளது. அதுமட்டுமின்றி அவருக்கு காய்ச்சல் மற்றும் இருமல், கரோனா வைரஸின் இரண்டு அறிகுறிகளும் உள்ளன.
கரோனா அறிகுறியுடன் கொல்கத்தா வந்துள்ள நிலையில் அவர் உடனடியாக பெலியகட்டா ஐடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் தங்கவைக்கப்பட்டுள்ள அவரது இரத்தம் மற்றும் துணியால் துடைக்கும் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதேபோன்ற கரோனா வைரஸின் அறிகுறிகளுடன் வந்த ஒன்பது மாத குழந்தை உட்பட மூன்று இந்தியர்களும் பெலியகட்டா அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் ஹோலி பண்டிகையின்போது இஸ்கானின் தலைமையகமான மாயாப்பூர் சென்ற இரண்டு இந்தியர்கள் ஒரே வார்டில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இருவரில் ஒருவர் சமீபத்தில் சவுதி அரேபியாவிலிருந்து திரும்பி வந்து காய்ச்சல் மற்றும் சளி பற்றி புகார் கூறினார். அவர்களின் இரத்த மாதிரிகள் மற்றும் துணியால் சேகரிக்கப்பட்டுள்ளன.
குவைத்தில் இருந்து பயணம் செய்த வரலாற்றைக் கொண்ட ஒன்பது மாத குழந்தையும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை பெற்று வருகிறது.
இதற்கிடையில், தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்ட ஒரு இத்தாலிய தம்பதியர் மற்றும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஐந்து பேரும் பெலியகட்டா ஐடி மருத்துவமனையில் இருந்து நாவல் கரோனா வைரஸ் இல்லை என உறுதியானபின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இவ்வாறு மேற்கு வங்க சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.