

இத்தாலியில் கரோனா வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,000 -ஐ கடந்துள்ளது.
இதுகுறித்து இத்தாலி ஊடகங்கள் தரப்பில் வெளியான தகவலில், “ இத்தாலியில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட இறப்புகளுடன் கோவிட் 19 காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,016 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கோவிட் 119 காய்சலுக்கு இதுவரை சுமார் 15, 113 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் கோவிட் 19 காய்ச்சல் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்” என்றார்.
இத்தாலியில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் அதிவேகமாகப் பரவி வருகிறது.பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேவர வேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கால்பந்துவிளையாட்டு போட்டிகள், ஆடைஅலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த நாடும் முடக்கப்பட்டுள்ளது.
மேலும் இத்தாலியில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பொதுக் கூட்டங்களுக்கு தடை உட்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்கள் தவிர்த்து பிற பொருட்களுக்கு வர்த்தகத் தடையை இத்தாலி அரசு விதித்துள்ளது.