கரோனா வைரஸ் பாதிப்பு; சீனாவில் தீவிரம் குறைகிறது

கரோனா வைரஸ் பாதிப்பு; சீனாவில் தீவிரம் குறைகிறது
Updated on
1 min read

சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு 7 பேர் பலியானதைத் தொடர்ந்து இவ்வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3, 176 பேராக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சீன சுகாதார அமைப்பு கூறும்போது, “ சீனாவில் கோவிட் 19 (கரோனா வைரஸ்) காய்ச்சல் காரணமாக வெள்ளிக்கிழமை வெளியான அறிக்கையின்படி 7 பேர் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து சீனாவில் கோவிட் 19 காய்ச்சலுக்கு 3, 176 பேர் பலியாகி உள்ளனர். 8 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமையன்று 1,318 பேர் கோவிட் - 19 காய்ச்சல் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறி உள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு கோவிட் - 19 பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

சீனாவில் கோவிட் -19 காய்ச்சல் பாதிப்புக்கு இதுவரை 3,136 பேர் பலியாகியுள்ளனர். 80,000க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் கடந்த இரு மாதங்களாக கரோனா வைரஸின் பாதிப்பு தீவிரமாக இருந்தபோது, இறப்பு எண்ணிக்கை மற்றும் நோய் தொற்று அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் கோவிட் 19 காய்ச்சலை கட்டுப்படுத்த சீன அரசும், அந்நாட்டு மருத்துவர்களும் இரவு, பகலாக எடுத்த முயற்சியின் விளைவாக தற்போது சீனாவில் கோவிட் 19 காய்ச்சல் படிபடியாக குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in