மலேசிய தமிழர்​களின் ‘இரும்புத் தோட்​டம்’

மலேசிய தமிழர்​களின் ‘இரும்புத் தோட்​டம்’
Updated on: 
1 min read

மலேசி​யாவில் உரு​வாகி​யிருக்​கும் திரைப்​படம், ‘இரும்​புத் தோட்டம்’. இர்ஃபான் ஜைனி கதாநாயக​னாக நடித்​துள்ள இதில் லோகவர்​மன் ஸ்ரீதரன், மேரி தாஷினி மேத்​யூஸ், மோகன ராஜ், துர்காஷினி எஸ்.வினோஷன், பாலன் காஷ், டத்தோ கீதாஞ்​சலி, கலைமாமணி கே.எஸ் மணி​யம், நிஷா மற்​றும் விஜய் நாயுடு உள்ளிட்ட மலேசிய நட்​சத்​திரங்​கள் நடித்​துள்​ளனர்.

மலேசி​யத் தேசிய ஒரு​மைப்​பாட்​டுத் துணை அமைச்​சர் துவான் யுனேஸ்வரன் ராம​ராஜ் சிறப்​புத் தோற்​றத்​தில் நடித்​துள்​ளார். ஏ.வி.எல்.டி புரொடக் ஷன் சார்​பில் ஜெகன் ஜான் பீட்​டர் தயாரித்துள்​ளார். தினேஷ் குமார் டி.கே ஒளிப்​ப​திவு செய்​துள்ள இப்​படத்​துக்கு ஷமேஷன் மணிமாறன் இசையமைத்​துள்​ளார். இப்படத்தை, ‘அடுத்த கட்​டம்’, ‘மைந்​தன்’ படங்​களைத் தொடர்ந்து ஹெவன் பிக்​சர்ஸ் ஆர்.கே.கண்​ணன் வெளி​யிடு​கிறார். புலனாய்வு க்​ரைம் த்​ரில்​லராக உரு​வாகி​யுள்ள இப்​படத்தை ஜெயதேவ் ஜெயகுமார் இயக்​கி​யுள்​ளார்.

அவர் கூறும்​போது,“ஒரு மாணவி மர்​மமாக கொல்​லப்​படு​கிறார், ஆசி​ரியர் மேல் சந்​தேகம் எழுகிறது. தடய​வியல் அதி​காரி ஒரு​வர் உள்​ளூர் காவல்​துறை அதி​காரியுடன் இணைந்து இந்த வழக்கை விசா​ரிக்​கிறார். விசா​ரணை​யில் பல ரகசி​யங்​கள் அவிழ்​கின்​றன. அது​தான் படம். சமூகத்​தின் மேலோட்​ட​மான பிம்​பத்​துக்​குப் பின்னால் மறைந்​திருக்​கும் கசப்​பான உண்​மை​களைத் தேடும் நீதிக்கான பயணமே இப்​படம். எனது சொந்த ஊரான மலாக்காவில் உள்ள டெபோங்​கில் முழுப் படத்​தையும் படமாக்கியுள்​ளோம்” என்றார்.

மலேசிய தமிழர்​களின் ‘இரும்புத் தோட்​டம்’
ஓ.ம்: விமர்சனம் - நடிப்பு அரக்கர்களும், ஆன்மா இல்லாத ஸ்பை த்ரில்லரும்!

X