

சென்னையில் உள்ள பிவிஆர் சத்யம் திரையரங்கில் பிப்.23 முதல் 25-ம் தேதி வரை சர்வதேசத் திரைப்பட விழாவை இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் நடத்துகிறது.
இதில் 23-ம் தேதி, மாலை 6 மணிக்கு ‘த டவர் ஆஃப் ஸ்ட்ரெங்த்’ என்ற மொண்டெனேகுரோ நாட்டுத் திரைப்படமும், 7.35 மணிக்கு ‘த டவுட்’ (இந்தியா), 24-ம் தேதி மாலை 6 மணிக்கு ரிவர்ஸ்டோன் (இலங்கை), 8 மணிக்கு ரொமான்சிங் சிட்னி (ஆஸ்திரேலியா) ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன. 25-ம் தேதி மாலை 6 மணிக்கு ‘த லாஸ்ட் டப்பர்’ (ஸ்பெயின்), 7.20 மணிக்கு ‘த ஹானரபிள் ட்ரம்’ (இந்தியா) படங்கள் திரையிடப்படுகின்றன.