திரையில் வெளியானது 'SISU': நாஜி படையை எதிர்த்து நிற்கும் தனி ஒருவன்!

SISU பட போஸ்டர்
SISU பட போஸ்டர்
Updated on
1 min read

சென்னை: நாஜி படையை எதிர்த்து நிற்கும் தனி ஒருவனின் கதையை விவரிக்கும் ‘SISU’ திரைப்படம் வெள்ளித்திரையில் உலகம் முழுவதும் வெளியானது. இந்தியாவில் சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வெளியிட்டுள்ளது. ஜல்மாரி ஹெலண்டர் இந்தப் படத்தை இயக்கி உள்ளார்.

1944-ல் வடக்கு ஃபின்லாந்தில் இந்த கதை நடப்பது போல காட்சி படுத்தப்பட்டுள்ளது. அனுபவம் வாய்ந்த சிப்பாயான ஆடோமி கோர்பி (ஜோர்மா டோமிலா) என்பவரை மையமாக வைத்து கதை நகர்கிறது. முதன்முறையாக ‘டொராண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவில்’ திரையிடப்பட்டது. பின்னர் கடந்த ஜனவரி மாதம் ஃபின்லாந்தில் பிரத்தியேகமாக திரையிடப்பட்டது. உலகம் முழுவதும் இன்று (ஏப்ரல் 28) இப்படம் வெளியாகவுள்ளது.

போரின்போது தனது குடும்பத்தையும், வீட்டையும் இழந்த ஆடோமி கோர்பி, லேப்லாந்தின் (Lapland) ஆளரவமற்ற பகுதியில் தனித்து வாழ்கிறார். அங்கு தங்கத்தை தோண்டி எடுக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுகிறார். அதிர்ஷ்டக் காற்று அவர் பக்கம் வீச, ஒரு பெரும் தங்கப் புதையல் அவருக்குக் கிடைக்கிறது. தங்கத்தைப் பாதுகாப்பாகச் சேமிக்க சுமார் 563 மைல் தொலைவிலுள்ள வங்கியை நோக்கிப் அவர் பயணிக்கிறார். அந்த வழியில் நாஜி வீரர்களால் அவர் பிடிக்கப்படுகிறார். எதிர்ப்படும் எவரையும், எதையும் கொன்று ஒழிப்பதே அந்த நாஜி குழுவின் பணி. அவர்கள் சாக விருப்பமில்லாத ஒரு தேர்ந்த சிப்பாயான ஆடோமி கோர்பியை எதிர்கொள்ளும் போது என்ன நடக்கிறது என்பதே கதை. மூச்சடைக்க வைக்கும் சாகசத்தையும், எலும்புகள் உடைப்படும் ஆக்ஷனையும், நரம்புகள் தெறிக்கும் த்ரில்லிங்கான அனுபவத்தையும் இந்தப் படம் வழங்குகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in