‘ஆஸ்கர்’ விருதுபெற்ற இசை அமைப்பாளர் காலமானார்

ருச்சி சகமோட்டோ
ருச்சி சகமோட்டோ
Updated on
1 min read

பிரபல ஜப்பானிய இசை அமைப்பாளர் ருச்சி சகமோட்டோ (Ryuichi Sakamoto). ‘த லாஸ்ட் எம்பரர்’, ‘தி லிட்டில் புத்தா’, ‘த ரெவரன்ட்’ உட்பட பல ஹாலிவுட் படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர், ‘த லாஸ்ட் எம்பரர்’ படத்துக்காக ஆஸ்கர் விருது பெற்றவர் . ‘பாஃப்டா’ உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். ‘மெர்ரி கிறிஸ்துமஸ், மிஸ்டர் லாரன்ஸ்’ படத்தில் நடித்தும் இருக்கிறார்.

இவருக்கு கடந்த 2014ம் ஆண்டு தொண்டைப் புற்றுநோய் ஏற்பட்டது. அதற்குச் சிகிச்சைப பெற்று குணமடைந்தார். இந்நிலையில் அவருக்கு மீண்டும் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. அதற்காகச் சிகிச்சை பெற்று வந்த அவர், மார்ச் 28ம் தேதி உயிரிழந்தார். அவருக்கு வயது 71. இதை அவர் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in