த ஸ்டூடன்ட்: தேசத்துக்கு பாடம் எடுக்கும் படைப்பு

த ஸ்டூடன்ட்: தேசத்துக்கு பாடம் எடுக்கும் படைப்பு
Updated on
1 min read

THE STUDENT / (M)UCHENIK | DIR: KIRILL SEREBRENNIKOV | 2016 | 118'

இளம் ரஷ்ய இயக்குனர் கிரில் செரெப்ரென்னிகோவ் (Kirill Serebrennikov) உருவாக்கிய 'த ஸ்டூடண்ட்' என்ற திரைப்படம் சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் பெருமை மிகு வரவு.

மத நம்பிக்கைகள் இன்றைய ரஷ்யாவை சிதைத்திருக்கின்றன என்பதை ஒரு விமர்சனமாக இத்திரைப்படத்தின் மூலமாக வைத்திருக்கிறார் இயக்குனர்.

பைபிளை முழுமையாக உள்வாங்கி, அதன் தத்துவங்களை வாழ்க்கை நெறியாக கொள்ளவேண்டும் என அனைவரையும் வற்புறுத்துகிறான் ஒரு மாணவன்.

வாழ்க்கை நெறிமுறைகளை அனைத்தையும் விஞ்ஞானபூர்வமாக கட்டமைக்க வேண்டும் என கற்றுக்கொடுக்கிறார் ஒரு ஆசிரியை.

இந்த இருவருக்கிடையே எழும் போராட்டங்களை மிகுந்த உளவியல் பார்வையில் பதிவு செய்திருக்கும் திரைப்படம் 'த ஸ்டூடண்ட்'.

'காரட்', 'காண்டம்' இரண்டையும் மாணவர்களுக்கு வழங்கி பாலியல் பாடத்தை எடுக்கிறார் ஆசிரியை. இதனை தலைமை ஆசிரியை கண்டிக்கிறார். ஒரு சிறந்த நகைச்சுவையை இக்காட்சி வழங்கினாலும், பாலியல் பாடத்தை பள்ளியில் எடுக்க ரஷ்யாவிலும் நெருக்கடி இருப்பதை இக்காட்சி உணர்த்துகிறது.

தீவிர மத நம்பிக்கைகள் ஒரு தனி மனிதனை மட்டுமல்ல... ஒரு தேசத்தையே சிதைக்கும் வல்லமை படைத்தவை என்பதே இத்திரைப்படம் நமக்கு கற்றுக்கொடுக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in