Published : 23 Sep 2018 09:10 AM
Last Updated : 23 Sep 2018 09:10 AM

அசாமிய மொழியில் ரிமா தாஸ் இயக்கிய ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’ படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை; பிறமொழி படங்கள் பட்டியலில் இந்தியா சார்பில் போட்டி

பிறமொழிப் படங்களுக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்க இந்தியாவில் 28 படங்கள் போட்டியிட்ட நிலையில், ரிமா தாஸ் இயக்கிய ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’ என்ற அசாமிய மொழி திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

2019-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்காக பிறமொழிப் படங்கள் பிரிவுக்கு தேர்வு செய்வதற்காக மும்பையில் பல்வேறு திரைப்படங்கள் திரை யிடப்பட்டன. இதில், ‘ராஸி’, ‘பத்மாவத்’, ‘ஹிச்கி’, ‘அக்டோபர்’, ‘லவ் சோனியா’, ‘குலாப்ஜாம்’, ‘பிஹு’, ‘கட்வி ஹவா’, ‘ரேவா’, ‘பயாஸ்கோப்வாலா’, ‘அஜ்ஜி’, ‘102 நாட்அவுட்’ உட்பட 28 திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

இந்த திரைப்படங் களை தேசிய திரைப் படக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் பார்த்தனர். இறுதியில், தேசிய விருது பெற்ற அசாமிய மொழி திரைப்படமான ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் படத்தை ஆஸ்கர் தேர்வுக் குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

இந்தியாவின் கிராமங்கள் அனைத்தும் ஒரேமாதிரி இருக்கிறதா? அடிப்படை வசதிகள் அவர்களுக்கு சென்று சேருகிறதா? அவர்களது வாழ்க்கைத்தரம் எப்படி இருக்கிறது என்பது போன்ற கேள்விகளுடன், ஒரு சிறுமியை மையக் கதாபாத்திரமாகக் கொண்டு இயக்குநர் ரிமா தாஸ் உருவாக்கிய திரைப்படம் ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’. இந்தப் படத்தின் தயாரிப்பு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகியவற்றையும் இவரே மேற்கொண்டிருக்கிறார்.

அசாமின் சிறிய கிராமம் ஒன்றில் வசிக்கும் சிறுமி துனு. தனது கிராமத்தில் ஒரு மியூசிக்கல் பேண்ட் உருவாக்க வேண்டும் என்பது அவளது ஆசை. அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் துனு, மியூசிக்கல் பேண்ட் உருவாக்கினாளா, இல்லையா என்று நகர்கிறது இப்படம். துனுவாக சிறுமி பனிதா தாஸ் நடித்திருக்கிறார்.

இப்படம் உலகம் முழுவதும் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, பல விருதுகளை வென் றுள்ளது.

65-வது தேசிய திரைப் பட விருதுகள் வரிசை யில் சிறந்த திரைப் படத்துக்கான ‘தங்கத் தாமரை’ விருது, கடந்த ஏப்ரலில் இப்படத்துக்கு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிறந்த குழந்தை நட்சத்திரம், சிறந்த ஒலிப்பதிவு, சிறந்த எடிட்டிங் ஆகிய பிரிவு களிலும் இப்படம் விருதுகளை வென்றது.

இந்தியத் திரைப்படங்கள் எதுவும் இதுவரை ஆஸ்கர் விருதைப் பெற்ற தில்லை.

2001-ம் ஆண்டில் ‘லகான்’ திரைப்படம் முதன்முறையாக முதல் 5 இடங்களுக்குள் வந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x