Published : 30 Jan 2024 06:14 AM
Last Updated : 30 Jan 2024 06:14 AM

சென்னையில் ரஷ்ய திரைப்பட விழா

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில், பிப்.2 மற்றும் 3-ம் தேதிகளில் ரஷ்ய திரைப்பட விழா நடக்கிறது. இந்த 2 நாள் விழாவில் ஆங்கில சப் டைட்டில்களுடன் படங்கள் திரையிடப்படுகின்றன. இந்தப் பட விழாவுக்கு அனுமதி இலவசம்.

பிப்.2-ம் தேதி மாலை 6 மணிக்கு விளாடிவோஸ்டோக் (Vladivostok) என்ற படம் திரையிடப்படுகிறது. ஆன்டன் பார்மடோவ் (Anton Bormatov) இயக்கிய இந்தப் படம் 2021-ம் ஆண்டு வெளியானது. எதிர்பாராமல் ஒரு குற்றத்தைச் செய்துவிடும் படத்தின் ஹீரோ, அதிலிருந்து தப்பிக்க, சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயல்கிறார். அது அவரை எங்கு கொண்டு நிறுத்துகிறது என்பது கதை..

பிப்.3-ம் தேதி, கித்ரோவ்கா - தி சைன் ஆஃப் ஃபோர் (Khitrovka - The sign of four) என்ற படம் திரையிடப்படுகிறது. 2023-ம் ஆண்டு வெளியான இந்த சாகசத் துப்பறியும் கதையை, கரேன் ஷக்னஜாரோவ் (Karen Shakhnazarov) இயக்கியுள்ளார். மாலை 5 மணிக்கு இந்தப் படம் திரையிடப்படுகிறது.

அன்று மாலை 7.30 மணிக்கு, ‘செபி: மை ஃபிளஃபி பிரண்ட்’(Chebi: My fluffy friend) என்ற படம் திரையிடப்படுகிறது. டிமிட்ரி டியாச்சென்கோ இயக்கி 2022-ம் ஆண்டு வெளியான இந்தப் படம், ஆரஞ்சு தோப்பில் வாழும் ஒரு விசித்திர சிறிய விலங்கைப் பற்றிய கதையைக் கொண்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x