Last Updated : 20 Dec, 2023 07:28 PM

 

Published : 20 Dec 2023 07:28 PM
Last Updated : 20 Dec 2023 07:28 PM

CIFF 2023 | ‘மெலோடி’ முதல் ‘அனாடமி ஆப் ஃபால்’ வரை: டிச.21-ல் என்ன படம் பார்க்கலாம்? - பரிந்துரைப் பட்டியல்

அனாடமி ஆப் ய ஃபால் திரைப்படத்திலிருந்து ஒரு காட்சி.

Melody | Dir:Behrooz Sebt-Rasoul | Tajikstan, Iran, UK | 2023 | 98 | WC-NC | Santham | 11.45 AM - குழந்தைகள் புற்றுநோய் மையம். இலையுதிர் காலம் முடியும் தருவாயில் மையத்தின் 30 குழந்தைகளுக்காக ஒரு கொண்டாட்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது. அப்போது 30 வெவ்வேறு பறவைகளின் ஒலிகளைப் பயன்படுத்தி உருவாக்கும் ஒரு பகுதியை இசையமைக்க விரும்புகிறார் இசை ஆசிரியர் மெலடி. இதன்மூலம் அக்குழந்தைகள் நோயிலிருந்து மீள்வார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கிறது. இசையமைப்பதற்காக தயாராகிறார் மெலோடி. ஆனால் 20 பறவைகளை மட்டுமே கண்டுபிடிக்க முடிகிறது. ​​​​மற்ற பறவைகளும் தேவை. ஆனால் அது அவ்வளவு எளிதாக கிடைக்காது.

பழைய கிராமிய பாடகருக்கு மட்டுமே தெரியும். ஆனால் பறவை வேட்டைக்காரர்கள் அவரை கிராமத்தை விட்டு வெளியேற்றிவிட்டார்கள் என்பதும் மெலடிக்கு தெரியவருகிறது. அவரையும் காணாமல் போன பறவைகளையும் கண்டுபிடிக்க மெலடி புறப்படுகிறார். பறவைகளைத் தேடி மெலடி குடும்ப வீட்டின் பணியாளரான வாய்பேசாத பராமரிப்பாளருடன் சேர்ந்து தனது மூதாதையர் கிராமத்திற்கு ஒரு பயணம் செய்கிறார்கள். மெலடியின் இந்தத் தேடல் இப்படத்தின் முக்கியமான பகுதி ஆகும். இயற்கையைப் பற்றிய சிக்கலான பல்வேறு விளக்கங்களுடன் ஆழமான தகவல்களை காட்சிகளாகக் கொண்டுள்ளது. மெலடி கதாபாத்திரத்தைச் சுற்றி ஒரு அழுத்தமான கதையைப் பின்னியுள்ள இப்படம் இந்தத் திரைப்படம் சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான தாஜிக் நுழைவுத் தேர்வாக 2024 ஆஸ்கார் விருதுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

A Brihter Tomarrow (Il sol dell'avvenire) | Dir: Nanni Moretti | Italy, France | 2023 | 95 | WC-NC | Seasons | 12.00 PM - ஒரு திரைப்பட இயக்குநர் இத்தாலியில் 50களில் ஏற்பட்ட சிந்தாந்த குழப்பத்தை படமாக எடுக்க முனைகிறார். அவர் எடுக்க விரும்பிய கதைப்படி 50களில் இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளூர் அலுவலகத்திற்கு ஹங்கேரிய பயண சர்க்கஸ் குழு ஒன்றை ரோம் நகருக்கு வருகிறது. சர்க்கஸ் குழுவின் வருகையானது புடாபெஸ்ட் மீதான சோவியத் படையெடுப்புடன் ஒத்துப்போகிறது, இது இத்தாலிய கம்யூனிஸ்டுகளிடையே அடையாள நெருக்கடியைத் தூண்டுகிறது, அவர்கள் ஆக்கிரமிப்பைக் கண்டிப்பதற்கும் சோவியத் ஒன்றியத்திற்கு தங்கள் கட்சியின் கடுமையான விசுவாசத்தைக் கடைப்பிடிப்பதற்கும் இடையில் உள்ளனர்.

சோவியத் யூனியன் ஹங்கேரி மீது படையெடுப்பதை அறிந்து புடாபெஸ்டில் இருந்து இத்தாலிக்கு செல்லும் ஒரு பயண சர்க்கஸ் குழுவினர் தங்கள் ஆதரவினை தெரிவிக்கும் விதமாக வேலைநிறுத்தம் செய்கிறார்கள். இத்தாலிய கம்யூனிஸ்ட்களும் , தங்கள் சோவியத் தோழர்களின் செயல்களை ஆதரிக்க முடியாது என்று உணர்கிறார்கள், எனவே அவர்கள் தங்கள் ஹங்கேரிய விருந்தினர்களுடன் ஒரு நிலைப்பாட்டை எடுத்து தங்கள் சொந்த கம்யூனிசத்தை கடைப்பிடிக்க முடிவு செய்கிறார்கள். படத்தை இயக்குபவராக இயக்குநர் ஜியோவானி என்ற கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பவர் இப்படத்தின் இயக்குநர் நன்னி மொராட்டி. ஹங்கேரிய புரட்சியைப் பற்றிய திரைப்படத்தை எடுக்கும்போது எவ்வாறு பல போராட்டங்களை அவர் எதிர்கொள்கிறார் என்பதை தனது உச்சபட்ச நடிப்பாற்றலால் வெளிப்படுத்தியுள்ளது படத்திற்கு வலிமை சேர்ப்பதாக உள்ளது. இந்த ஆண்டு கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்டு பாம் டிஓர் விருதுப் போட்டியிலும் பங்கேற்ற திரைப்படம்.

Sent of Wind (Derb) | Dir: Hadi Mohaghegh | Iran | 2022 | 90 | WC-NC | Seasons | 4.15 PM - தனது முந்தைய படமான "இம்மார்டல்" படத்திற்காக பூசான் திரைப்பட விழாவில் இரண்டு பெரிய பரிசுகளை வென்ற இப்படத்தின் இயக்குநர் சையது ஹாதி மொஹாகெக் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு செதுக்கியிருக்கும் இன்னுமொரு படைப்பு இது.

புகழ்பெற்ற ஈரான் திரைப்பட இயக்குநர்களாக அப்பாஸ் கியராஸ்தமி, மஜீத் மஜீதி, தாருஹ் மெஹ்ருஜி போன்ற இயக்குநர்களின் வரிசையில் அவர் இன்னுமொரு யதார்த்த காவியமாக இத்திரைப்படத்தை படைத்துள்ளார். தொலைதூர ஈரானிய கிராமத்தில் பக்கவாதத்தால் முடக்கப்பட்ட மகனைக் கவனித்துக் கொள்ளும் ஊனமுற்ற தந்தையைப் பற்றிய கதை இது. மகன் சிகிச்சைக்காக மலைகளில் மூலிகை மருந்துகளை சேகரிக்கிறார். அவரது வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது, அதை சரிசெய்ய ஒரு எலக்ட்ரீஷியன் வருகிறார். இந்தச் சிக்கல் எதிர்பார்த்ததைவிட பெரியதாக மாறுகிறது. இப்பிரச்சினை தீர்க்கப்பட இன்னும் சில நாட்கள் ஆகலாம் என்ற நிலையில் தந்தையின் முயற்சி எவ்வாறு அமைகிறது என்பதை இப்படம் சித்தரிக்கிறது. இப்படமும் பூசான் திரைப்பட விழாவில் விருது பெற்றது.

Anatomy of Fall (Anatomie d'une chute) | Dir: Justine Triet | France | 2023 | 151 | WC-NC | Anna | 6.30 PM - இத்திரைப்படத்தின் கதைக்களம் ஆல்ப்ஸ் மலையைப்போன்ற அழகுமிக்க பிரான்ஸ் நாட்டின் கிரெனோபல் மலைத் தொடரில் நடக்கிறது. அங்குள்ள தனிமையான ஒரு மரவீட்டில் தங்கியிருக்கிறார்கள் சாமுவேல் மலேஸ்கியும் அவரது மனைவியும் மகனும். சாமுவேல் மலேஸ்கி தனது அறையில் மிகவும் சத்தமாக இசையை வாசித்துக் கொண்டிருக்கிறார், அவரது மனைவி, நாவலாசிரியர் சாண்ட்ரா வொய்டர், தன்னை நேர்காணல் செய்யும் பெண் மாணவியுடன் மீண்டும் திட்டமிடுமாறு கேட்கிறார்.

இதற்கிடையில் சாமுவேல் தனது அறையின் ஜன்னலுக்குக் கீழே இறந்து கிடக்கும் செய்தி கிடைக்கிறது. தனது கணவர் இறந்து கிடப்பதைக் காணும் சான்ட்ரா இநத உயிரிழப்பு இயல்பான மருத்துவக் காரணங்கள் அல்ல அது திட்டமிட்டக் கொலை என்றும் சந்தேகிக்கிறார், மேலும் அவர்களின் பார்வையற்ற மகன் முக்கிய சாட்சியாக தார்மீக சங்கடத்தை எதிர்கொள்கிறார். அனாடமி ஆஃப் எ ஃபால் படத்தின் இரண்டரை மணிநேரமும் சாமுவேலின் மரணத்திற்கு வழிவகுத்த சாத்தியக்கூறுகளை வழக்கறிஞர்களும் விசாரணை அதிகாரிகளும் பிரித்து மேய்கிறார்கள். படத்தில் சாமுவேல் குடும்பத்தினருடன் இணைந்த அனைவரின் பேரிலும் சந்தேகம் ஒரு சூறாவளியென சுழன்று மையங்கொள்கிறது.

இது சம்பந்தமாக அதிர்ச்சிகரமான ரிப்போர்ட்கள், யூகங்கள் மற்றும் ஓவியங்கள் மற்றும் அவரது மகன் மற்றும் அவரது மனைவியின் சாட்சியங்கள் அணிவகுக்கின்றன. ஒரு கட்டத்தில் வெற்றிகரமான ஜெர்மன் எழுத்தாளர் சாண்ட்ரா (ஒரு பாவம் செய்ய முடியாத சாண்ட்ரா ஹுல்லர்), அவர் விரைவில் தனது கணவரின் கொலைக்கு முக்கிய சந்தேகத்திற்குரிய நபராக மாறுகிறார். ஆனால் இறுதி வரை கொலையாளி யார் என்பது ஒரு மர்ம விளையாட்டைப்போல தொடர்கிறது. இத்திரைப்படம், சிகாகோ, டொராண்டோ, வாஷிங்டன் திரைப்படவிழாக்களிலும் ஈரோப்பியன் பிலிம் அவார்டிலும், சிட்னி, கேன்ஸ், கோல்டன் குளோப் உள்ளிட்ட 33 விருதுகளையும் 70 பரிந்துரைகளையும் பெற்றுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x