

இசை அமைப்பாளர் அனிருத்தின் இசை நிறுவனமான அல்புகெர்க்கி ரெக்கார்ட்ஸ் ‘அன்னக்கிளியே’ என்ற வீடியோ இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளது. ஸ்மித் ஆஷர் இசையில் உருவான இந்த சுயாதீன ஆல்பத்தின் பாடலை, தீக் ஷிதா எழுதி பாடியிருக்கிறார். அவருடன் ஸ்மித் ஆஷர் இணைந்து பாடியுள்ளார். இதில் பவன் அலெக்ஸ், பிரகதி ஸ்ரீவத்சவா நடித்துள்ளனர். இந்தப் பாடலுக்கான வீடியோவை விக்கி பப் இயக்கியுள்ளார். ஜே சரோலா ஒளிப்பதிவு செய்துள்ளதை தீஜோ பரத்வாஜ் தயாரித்துள்ளார்.
இப்பாடலுக்காக, பறவை மற்றும் விலங்கு இனத்தைச் சார்ந்த யாழியை, கிராபிக்ஸ் மூலம் 6 மாத கால உழைப்பில் உருவாக்கியுள்ளனர். இதை இன்றைய ஜென் ஸீ தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் வகையில் இதில் பயன்படுத்தியுள்ளனர். இந்த வீடியோ ஆல்பத்தை அனிருத் அவருடைய பிரத்யேக யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது வரவேற்பைப் பெற்று வருகிறது.