‘ஜனநாயகன்’ மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை எப்போது?

‘ஜனநாயகன்’ மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை எப்போது?
Updated on
1 min read

புதுடெல்லி: விஜய்யின் ‘ஜனநாயகன்' திரைப்படத்தை வெளியிட தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (ஜன.15) விசாரணை நடைபெறும் எனத் தெரிகிறது.

தவெக தலை​வ​ரான நடிகர் விஜய் நடித்​துள்ள கடைசிப்​ படம் ‘ஜன​நாயகன்’. கேவிஎன் நிறு​வனம் தயாரித்​துள்ள இந்த படத்தை ஹெச்​.​வினோத் இயக்கியுள்​ளார். ஜனவரி 9-ம் தேதி உலகம் முழு​வதும் படத்தை வெளி​யிட திட்​ட​மிட்​டிருந்​தனர். இதற்கான தொடக்ககட்ட பணிகள் நடந்து வந்தன. டிக்கெட் முன்பதிவும் தொடங்கி நடந்து வந்தது.

ஆனால், படத்​துக்கு தணிக்கை சான்​றிதழ் வழங்க மறுத்த மத்​திய தணிக்கை வாரி​யம், படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்​பியது. இதை எதிர்த்து படத் ​த​யாரிப்பு நிறு​வனம் சார்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. இந்த வழக்கை விசா​ரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷா, ‘ஜனநாயகன்’ படத்தை மறு ஆய்வு குழு​வுக்கு பரிந்​துரை செய்த தணிக்கை வாரிய தலை​வரின் உத்​தரவை ரத்து செய்​தார்.

இந்த உத்​தரவை எதிர்த்து தணிக்கை வாரி​யத்​தின் சார்​பில் மேல்​முறையீட்டு மனு தாக்​கல் செய்​யப்​பட்டது. இதை விசா​ரித்த சென்னை உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி எம்​.எம்.ஸ்ரீவாஸ்​தவா தலை​மையி​லான அமர்​வு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்​தது. மேலும் இந்த மேல்​முறை​யீட்டு வழக்கை ஜனவரி 20-ம் தேதிக்கு தள்ளிவைத்​து, பதில் மனு தாக்​கல் செய்யுமாறு தயாரிப்பு நிறு​வனத்​துக்கு உத்​தர​விட்​டது.

இதை எதிர்த்து படத் தயாரிப்பு நிறு​வனத்​தின் சார்​பில் வழக்​கறிஞர் இ.சி.அகர்​வாலா உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீட்டு மனுவை தாக்​கல் செய்​துள்​ளார். அதில், சென்னை உயர் நீதி​மன்றத்தின் இடைக்​கால தடையை நிறுத்தி வைக்க வேண்​டும் என்​றும், தணிக்கை வாரி​யத்​தின் வாதத்தை கேட்​காமல் உத்தரவைப் பிறப்​பிக்க வேண்​டும் என்​றும் கோரப்​பட்​டுள்​ளது.

இதனிடையே, தங்​கள் தரப்பு கருத்தைக் கேட்ட பிறகே எந்​தவொரு உத்​தர​வை​யும் பிறப்​பிக்க வேண்​டும் என்று தணிக்கை வாரி​யத்​தின் வழக்​கறிஞர் அம்​ரீஷ் குமார் கேவியட் மனுவை தாக்கல் செய்​துள்​ளார்.

இந்த நிலையில், ‘ஜனநாயகன்' திரைப்படத்தை வெளியிட தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (ஜன.15) விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘ஜனநாயகன்’ மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை எப்போது?
“போராடும் ஆசிரியர்களை அடக்கி ஒடுக்குவதுதான் கல்வியில் சிறந்த தமிழ்நாடா?” - சீமான்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in