அஜித்குமார் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன்

அஜித்குமார் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன்

’AK64’ படப்பிடிப்பு எப்போது? – இயக்குநர் தகவல்

Published on

‘AK64’ படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதற்கு இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பதிலளித்துள்ளார்.

’குட் பேட் அக்லி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து படம் பண்ணவுள்ளனர். இதன் அறிவிப்பு, படப்பிடிப்பு எப்போது உள்ளிட்ட எதுவுமே தெரியாமல் இருக்கிறது. ஆனால், படப்பிடிப்புக்கான பணிகள் மட்டும் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே விழா ஒன்றில் கலந்துக் கொண்ட ஆதிக் ரவிச்சந்திரனிடம் ’AK64’ குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு ”அஜித் சார் படத்தின் முதற்கட்டப் பணிகள் கிட்டதட்ட முடிந்துவிட்டது. படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்து வருகிறேன். பிப்ரவரி மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கிவிடுவேன். அஜித் சார் எந்த மாதிரியான கதாபாத்திரம் என்பதை எல்லாம் இப்போதைக்கு கூற முடியாது.

’குட் பேட் அக்லி’ படத்துக்கு பிறகு அஜித் சார் இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியுள்ளார். அதனால் இப்படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். அதனை மனதில் வைத்து இப்படத்தில் பணிபுரிந்து வருகிறேன். கார் ரேஸ் மூலமாக இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்துள்ளார் அஜித் சார்” என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.

<div class="paragraphs"><p>அஜித்குமார் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன்</p></div>
’அரசன்’ அப்டேட்: முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி ஒப்பந்தம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in