

‘ஜெயிலர் 2’ படம் அக்டோபர் 15-இல் வெளியாகிறது. அதற்கு அடுத்த வாரம் விஷ்ணு விஷால் - மமிதா பைஜு ஜோடி சேர்ந்துள்ள ‘இரண்டு வானம்’ ரிலீஸ். முதல் வாரம் ரஜினி படம் வெளியாவது பற்றிச் சட்டைசெய்யாமல் துணிந்து களமிறங்குகிறது ‘இரண்டு வானம்’ படக்குழு.
முதல் காரணம், விஷ்ணு விஷால் - இயக்குநர் ராம்குமார் கூட்டணியில் 2014-இல் வெளிவந்த ‘முண்டாசுப்பட்டி’, 2018-இல் வெளிவந்த ‘ராட்சசன்’ ஆகிய இரண்டு படங்களும் பிளாக்பஸ்டர்கள்!
இவர்கள் மூன்றாம் முறையாக இணைந்திருப்பதால் ‘இரண்டு வானம்’ எல்லா ஏரியாவிலும் நல்ல விற்பனை. இரண்டாவது காரணம் நாயகி மமிதா பைஜு. இந்த நடிப்பு ராட்சசி நடித்து சமீபத்தில் தமிழில் வெளியான படங்கள் எல்லாமே வசூலைக் குவித்துள்ளன.
சமீப ஆண்டுகளில் மொத்தம் 150 நாள் படப்பிடிப்பு நடத்தப்பட்ட ஒரே படம் என்று கூறியிருக்கிறார் படத்தின் இயக்குநர் ராம்குமார்.