விக்​ரமின் ‘பவர் ஹவுஸ்’

விக்​ரமின் ‘பவர் ஹவுஸ்’
Updated on
1 min read

ஆனந்த் ஷங்​கர் இயக்​கத்​தில் விக்ரம் நடிக்​கும் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்​பில் டி.ஜி.​தி​யாக​ராஜன் வழங்க, செந்​தில் தியாக​ராஜன், அர்​ஜுன் தியாக​ராஜன் தயாரிக்​கின்​றனர். இதில் எம்​.எஸ்​.​ பாஸ்​கர், ஊர்​வசி, சம்​யுக்தா ஹெக்​டே, ரியா ஷிபு, வி.டி.​வி. கணேஷ் உள்​ளிட்ட பலர் நடிக்​கின்​றனர். சந்​தோஷ் நாராயணன் இசையமைக்​கும் இப்​படத்​துக்கு ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்​ப​திவு செய்​கிறார்.

இந்​தப் படத்​துக்கு ‘பவர் ஹவுஸ்’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். இந்​தப் படத்​தின் டைட்​டில் டீஸர் வரவேற்​பைப் பெற்​று​வரு​கிறது. “சென்​டிமென்ட் கலந்த ஆக் ஷன் திரைப்​படம் இது. விக்​ரமின் வழக்​க​மான மாஸ் அம்​சங்​களு​டன், குடும்ப பார்​வை​யாளர்​களைக் கவரும் உணர்​வுப்​பூர்​வ​மான கதை, பரபரப்​பான த்ரில்​லர் திரைக்​கதை மற்​றும் ஆக் ஷன் காட்​சிகள்​ இணைந்​த படமாக இது இருக்​கும்​” என படக்​குழு கூறி​யுள்​ளது.

விக்​ரமின் ‘பவர் ஹவுஸ்’
திரைத் தெறிப்புகள்: சூரியின் மகிழ்ச்சி முதல் அம்பிகா அட்வைஸ் வரை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in