“25 படங்களை கடந்திருப்பதே பெரிய விஷயம்தான்!” - விக்ரம் பிரபு நேர்காணல்

“25 படங்களை கடந்திருப்பதே பெரிய விஷயம்தான்!” - விக்ரம் பிரபு நேர்காணல்

Published on

விக்ரம் பிரபு நடித்திருக்கும் ‘சிறை’ அவருக்கு 25-வது திரைப்படம். சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ள இதில் தயாரிப்பாளர் லலித்தின் மகன் அக் ஷய் சிறைக் கைதியாக நடித்திருக்கிறார். ஒரு போலீஸ்காரருக்கும் கைதிக்குமான உறவைச் சொல்லும் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க வைத்திருக்கிறது. படம் பற்றி விக்ரம் பிரபுவிடம் பேசினோம்.

Q

மீண்​டும் ஒரு போலீஸ் கதை​யில நடிச்​சிருக்​கீங்​க...

A

ஆமா. ‘டாணாக்​காரன்’ படத்தை இயக்​கிய தமிழ்​தான் ‘சிறை’ கதையை எழு​தி​யிருக்​கார். முதல்ல, ‘ஒரு போலீஸ் கதை இருக்​கு, கேட்​கிறீங்​களா?’ன்னு அவர் கேட்​டதும் ‘டாணாக்​காரன்’ பண்​ணினதுல இருந்தே போலீஸ் கதைகளா நிறைய வந்​துட்டு இருக்​கு. இது​வும் போலீஸ் கதை​யா?’ன்னு கேட்டேன்.

‘நேர்ல சொல்​றேன் கேளுங்​க’ன்னு வந்​தார். சொன்​னார். ரொம்ப சுவாரஸ்​யமா இருந்​தது. நிறைய புது விஷ​யங்​களும் இருந்​தது. வெற்​றி​மாறன் சார்ட்ட ஒர்க் பண்​ணின, சுரேஷ் ராஜகு​மாரி இயக்​குறார்னு சொன்​னதும் சரின்னு சொன்​னேன். ஒரு உண்​மைச் சம்​பவக் கதையை ரொம்ப அரு​மையா பண்​ணி​யிருக்​கார். வசனங்​களை எல்​லோருமே பாராட்​டு​வாங்க.

Q

‘டாணாக்​காரன்’ போலீஸ்​காரனுக்​கும் இந்த கேரக்​டருக்​கும் என்ன வித்​தி​யாசம்?

A

‘டாணாக்​காரன்’ படத்​துக்​குப் பிறகு ஒரு பத்து போலீஸ் கதைகளாவது எனக்கு வந்​திருக்​கும். அது எதை​யுமே பண்​ணல. அதுல இருந்து இந்​தக் கதை ரொம்ப வித்​தி​யாச​மாக​வும் என் கதா​பாத்​திரம் இதுல என்ன பண்​ணுதுங்கற விஷய​மும் ரொம்ப பிடிச்​சிருந்​தது. உடனே ஓகே சொல்​லிட்​டேன். ‘டாணாக்​காரனு’க்கு 15 கிலோ உடல் எடை குறைச்சு நடிச்​சேன்.

இதுல 15 கிலோ எடை அதி​கரிச்​சேன். போலீஸ் துறைக்​குள்​ளேயே இருந்து ஊறினவன் எப்​படி​யிருப்​பான்? அவன் மனநிலை எப்​படி​யிருக்​கும்? அவன் மற்​றவங்​களை எப்​படி பார்க்​கிறான்னு அந்த கேரக்​டர் இருக்​கும். நடிகனா இருக்​கிற​தால, நிறைய வாழ்க்​கையை வாழலாம்ல. இந்த கதா​பாத்​திரத்​துக்​காக வேறொரு வாழ்க்​கையை வாழ்ந்​திருக்​கேன்.

Q

‘சிறை’ல உங்​களோட கைதியா நடிச்​சிருக்​கிற அக் ஷய் எப்​படி?

A

அது, தயாரிப்​பாளர் லலித் மகன் அவர். ஒரு நல்ல படத்​துல அறி​முக​மாகணும்னு இதுல அறி​முக​மாகிறார். பெரிய கமர்​ஷியல் படம்னு நினைக்​காம, ஒரு அர்த்​த​முள்ள படத்​துல அறி​முகப்​படுத்​தணும்னு இந்​தக் கதை​யில நடிக்க வச்​சிருக்​கார். அக் ஷய் இந்​தப் படத்து கேரக்​டருக்​காக ரொம்ப உழைச்​சிருக்கார். சிறப்பா நடிச்​சிருக்​கார். அனிஷா உள்பட இதுல கேரக்​டரா எல்​லோருமே அருமையா நடிச்​சிருக்​காங்க.

Q

இது உங்​களுக்கு 25-வது படம்?

A

ஆமா. அதுக்​குள்ள காலம் வேகமா ஓடி​யிருக்​கு. சினி​மாவுக்கு வந்து 13 வருஷம் ஆச்​சு. நடு​வுல கோவிட்ல 2 வருஷம் போயிடுச்​சு. ஆரம்​பத்​துல இருந்தே நான் சினி​மாவை அப்​ரோச் பண்​ணினது எப்​படின்​னா, கமர்​ஷிய​லாக​வும் இருக்​கணும், அதே நேரத்​துல நல்ல கதை​யும் சொல்​லணும். ஒரு அனுபவமாக​வும் இருக்​கணும்னு நினைச்​சு​தான் ‘கும்​கி’​யில இருந்து சினிமா வாழ்க்​கையை தொடங்​கினேன். அதை நோக்கி போயிட்​டிருக்​கும்​போது, என் விருப்​பத்தை மீறி சில கட்​டா​யத்​துக்​குள்ள விழுந்​திருக்​கேன்.

இதை பண்ணியாகணு​மா? பண்​ணலாம்னு நடிச்​சிருக்​கேன். இப்ப அப்​படி​யில்ல. கோவிட்​டுக்கு பிறகு பார்​வை​யாளர்​கள், வெவ்​வேறு வித​மான கதைகளை விரும்ப ஆரம்​பிச்​சிருக்​காங்க. நல்ல கதைகளைத் தேடறாங்க. அது ஒரு வகை​யில நடிகர்​களுக்​கும் இயக்​குநர்​களுக்​கும் இந்த இன்​டஸ்​டஸ்ட்​ரிக்​குமே நல்ல விஷ​யம்​தான். அதை​தான் நான் ஆரம்​பத்​துல இருந்தே முயற்சி பண்​ணிட்​டிருந்​தேன். அது இப்ப நடக்​குது.

Q

25 படங்​கறது சினி​மாவுல ஒரு மைல்​கல்​...

A

உண்​மை​தான். என் மேல இருக்​கிற அழுத்​தமே சினி​மாவுல மூன்​றாவது தலை​முறை நடிகன் அப்​படிங்​கறது​தான். தாத்தா (சி​வாஜி கணேசன்) படங்​கள்பண்​ணின வேகத்​துக்​கும் அப்பா (பிரபு) படங்​கள்ல நடிச்ச வேகத்​துக்​கும் நான் இப்ப பண்​றதுக்​கும் நிறைய வித்​தி​யாசம் இருக்​கு. அப்​படித்​தான் சினி​மா​வும் வளர்ந்​திருக்​கு. இந்த நேரத்​துல 25 படங்​களை கடந்​திருக்​கிறதே பெரிய விஷ​யம்​தான்.

என்​னோட 25 வது படம், 2025-வது வருஷம் 25-ம் தேதி ரிலீஸ் ஆகறது மகிழ்ச்​சியாஇருக்​கு. அடுத்த 25 வருஷம் என்ன பண்​ணப்போறேன்னு கேட்​டா, எங்​கிட்ட அப்​படி எது​வும் இல்​லை. இன்​னைக்கு இங்க இருக்​கிறதையே, நான் திட்​ட​மிடலை. அதனால ரொம்ப எதை​யும் யோசிக்க மாட்​டேன். அன்​னன்​னைக்கு என்ன பண்​ணணுமோ, அதை மட்​டுமே பார்ப்​பேன். அதி​கம் எதிர்​பார்த்​தா, அதுவே சில நேரம் ஏமாற்​ற​மா​யிடும். அடுத்த 25 வருஷத்​துல இன்​னும் அதி​க​மான அனுபவங்​கள் கிடைச்​சிருக்​கும். சினி​மாங்​கறது கற்​றல் தானே. சினி​மாவுக்கு வந்த இத்​தனை வருஷத்​துல நான் தெரிஞ்​சுகிட்ட விஷ​யங்​களை அடுத்​தடுத்த வருஷங்​கள்ல இன்​னும் சிறப்பா பயன்​படுத்துவேன்னு நினைக்​கிறேன்.

Q

‘அன்னை இல்​ல’த்​துல இருந்து வர்ற நடிகர்ங்​கறது உங்​களுக்கு பிளஸ்னு நினைக்​கிறீங்​களா?

A

கண்​டிப்பா அது பிளஸ்​தான். அது ஒரு ஆசிர்​வாதம். அதோட அது பொறுப்​பும் கூட. முதல்ல என்னை அப்​ரோச் பண்​றதுக்கு ரொம்ப யோசிப்​பாங்க. இப்ப அப்​படி​யில்ல. நிறைய புது இயக்​குநர்​களோட ஒர்க் பண்​ணி​யிருக்​கேன். அவங்​ககிட்ட இருந்​தும் கற்​றிருக்​கேன். ‘யார் உங்க தாத்​தா?’ன்னு கேட்டா சிவாஜின்னு சொல்​றதும் ‘யார் உங்​கப்​பா?’ன்னு கேட்​டா, பிரபுன்னு சொல்​றதும் எனக்கு பெரு​மை​தான். அவங்​களுக்கு என்​னால இன்​னும் பெருமை சேர்க்க முடிஞ்சா அது இன்​னும் நல்லாயிருக்​கும்​.

“25 படங்களை கடந்திருப்பதே பெரிய விஷயம்தான்!” - விக்ரம் பிரபு நேர்காணல்
Avatar: Fire and Ash விமர்சனம் - திரை பிரம்மாண்டமும் தீர்ந்து போன சரக்கும்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in