நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்

நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்
Updated on: 
1 min read

பிரபல நடிகை வத்​சலா ராஜகோ பால் சென்​னை​யில் காலமானார். அவருக்கு வயது 93.

நாடகங்​களில் இருந்து சினிமாவுக்கு வந்​தவர் வத்​சலா ராஜகோபால். பாலு மகேந்​திராவின் கதை நேரம், ராதி​கா​வின் சித்தி உள்​பட ஏராளமான சின்​னத்​திரை தொடர்​களில் நடித்​துள்​ளார். ரோஜா, சதி லீலா​வதி, காலமெல்​லாம் காதல் வாழ்க, ரிதம், அந்​நியன், வின்​னர், மொழி உள்​பட பல்​வேறு திரைப்​படங்​களில் நடித்​துள்​ளார். முன்​னணி நடிகர்​களுக்​குப் பாட்​டி​யாக நடித்​துள்ள இவர், ஜமீன் பல்​லா​வரத்​தில் குடும்​பத்​துடன் வசித்து வந்​தார்.

வயது மூப்பு காரண​மாக நேற்று அதி​காலை காலமானார். அவரது இறுதிச் சடங்கு குரோம்​பேட்​டை​யில் நேற்று நடை​பெற்​றது. மறைந்த வத்​சலா ராஜகோபாலின் கணவர் ராஜகோபால் ஏற்​கெனவே காலமாகி​விட்​டார். அவருக்கு சுரேஷ், சிவாஜி ஆகிய மகன்​களும் காயத்ரி என்ற மகளும் உள்​ளனர். மூத்த மகன் அசோக் ஏற்​கெனவே இறந்​து​விட்​டார். நடிகை வத்​சலா ராஜகோபாலின் மறைவுக்கு திரை​யுல​கினர் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர்.

நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்
பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ 2027 பொங்கலுக்கு ரிலீஸ்

X