

இசை ரசிகர்கள் மற்றும் முருக பக்தர்கள் காப்புரிமையின்றிப் பயன்படுத்தும் நோக்கில் ‘முருகர் யுகம் பிறந்தாச்சி ’ என்ற பக்திப் பாடல் உருவாகி உள்ளது. இந்தப் பாடலை புண்ணியம் பவுண்டே ஷன் தயாரித்துள்ளது. புகழ்பெற்ற இசை நிறுவனமான டிவோ மியூசிக் நிறுவனம் வெளியிடுகிறது.
இந்தப் பாடலை தயாரிப்பாளரும் நடிகருமான ஜெயம் எஸ்.கே.கோபி உருவாக்கியுள்ளார். வைக்கம் விஜயலட்சுமி பாடியிருக்கிறார். கவிஞர் பிறைசூடனின் மகன் தயானந்த் பிறைசூடன் இசை அமைத்துள்ளார்.
இதுபற்றி ஜெயம் எஸ்.கே.கோபி கூறும்போது, “இந்தப் பாடலை உலகில் உள்ள முருக பக்தர்களுக்காக உருவாகியுள்ளோம். ஒரு முருக பக்தைக்கும் முருகனுக்கும் நிகழும் உரையாடல் போல இப்பாடல் அமைந்துள்ளது” என்றார். முருக பக்தர்கள் இந்தப் பாடலைக் காப்புரிமை இல்லாமல் பயன்படுத்திக் கொள்ளலாம். நாளை (ஆக.25) இப்பாடல் வெளியாக இருக்கிறது.