

சர்வதேச திரைப்பட விமர்சன தளம் லெட்டர்பாக்ஸ்ட் (Letterboxd). உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ரசிகர்கள், விமர்சகர்கள், சினிமா ஆர்வலர்கள் பயன்படுத்தும் முன்னணி திரைப்பட விமர்சன தளம் இது.
பயனர்களின் மதிப்பீடுகள், விமர்சனங்கள், பார்வை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு பிரிவுகளில் சிறந்த திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் வெளியிடும் இந்த தளம், 2025ம் ஆண்டுக்கும் அப்படி வெளியிட்டுள்ளது. இதில் நகைச்சுவை பொழுதுபோக்கு படப் பிரிவில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் இடம்பெற்றுள்ளது.
டாப் 10 பட்டியலில் இப்படம், 6-ம் இடத்தைப் பிடித்துள்ளது. உலகளாவிய அளவில் வெளியாகியுள்ள இப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே தமிழ்த் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அபிஷன் ஜீவிந்த் இயக்கியுள்ள இப்படத்தில் சசிகுமார், சிம்ரன், எம்.எஸ்.பாஸ்கர் உள்பட பலர் நடித்துள்ளனர்.