இன்​றைய தலை​முறை காதலை பேசும் ‘வைஃப்’

இன்​றைய தலை​முறை காதலை பேசும் ‘வைஃப்’
Updated on
1 min read

ஆர்ஜே விஜய், அஞ்​சலி நாயர் நாயகன், நாயகி​யாக நடித்​துள்ள திரைப்​படம் ‘வைஃப்’. இவர்​களு​டன் மைத்​ரேயன், ரெடின் கிங்ஸ்லி, அபிஷேக் ஜோசப், விஜய் பாபு, கல்​யாணி நடராஜன் உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். ஒலிம்​பியா மூவிஸ் சார்​பில் எஸ்.அம்​பேத்​கு​மார் தயாரிக்​கும் இப்​படத்தை ஹேம​நாதன் ஆர் இயக்​கி​யுள்​ளார்.

ஜென் மார்​டின் இசையமைத்​துள்ள இப்​படத்​துக்கு கே.ஏ.சக்திவேல் ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். இன்​றைய தலைமுறை​யில் காதலும், திரு​மணத்​துக்​குப் பின்​பான அவர்​கள் வாழ்​வும் எப்​படி இருக்​கிறது என்​ப​தை​யும், இன்​றைய நவீன தம்பதி​களின் உறவுச்​ சிக்​கலை​யும் பேசும் வகை​யில் ரொமான்ஸ் டிர​மா​வாக இப்​படம் உரு​வாகி​யுள்​ளது.

இப்​படத்​தில் இருந்து விஷ்ணு எடவன் எழு​தி​யுள்ள ‘நீ சாரல்’ என்ற பாடல் வெளி​யாகி வரவேற்​பைப் பெற்​றுள்​ளது. இப்​படத்​தின் படப்​பிடிப்பு முடிந்த நிலை​யில் இறு​திக்​கட்ட பணி​கள் நடந்து வருகின்றன.

இன்​றைய தலை​முறை காதலை பேசும் ‘வைஃப்’
Fair Play: டாக்ஸிக் உறவை கச்சிதமாக கையாளும் எமிலி | திரை தேவதைகள் 13

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in