நெல்லை மாவட்ட பின்னணியில் அருள்​நிதி - அமீரின் ‘வேட்ட சாமி’

நெல்லை மாவட்ட பின்னணியில் அருள்​நிதி - அமீரின் ‘வேட்ட சாமி’
Updated on
1 min read

அருள்​நிதி மற்​றும் அமீர் இணைந்து நடித்​துள்ள படம், ‘வேட்ட சாமி’. இதில் ஆடு​களம் நரேன், மதுசூதன் ராவ், ஹரீஷ் பெராடி, விஜி சந்​திரசேகர், இந்​து​மதி மணி​கண்​டன், மைனா நந்​தினி, இயக்​குநர் தமிழ், கவிதா பாரதி உள்​ளிட்ட பலர் முக்​கிய கதாபாத்திரங்​களில் நடித்​துள்​ளனர்.

‘பம்​பர்’ படத்தை இயக்​கிய எம்.செல்​வகு​மார் இயக்​கி​யுள்ள இப்​படத்தை 7 மைல்ஸ் பெர் செகண்ட் புரொடக் ஷன்ஸ் சார்​பில் சாமுவேல் மேத்யூ தயாரிக்​கிறார். ஜிப்​ரான் இசையமைத்​துள்ள இப்​படத்​துக்கு ஆர்​.டி. ராஜசேகர் ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். இப்​படத்​தின் முதல் தோற்​றத்​தை, இயக்​குநர்​கள் லோகேஷ் கனகராஜ், ஆர்ஜே பாலாஜி வெளி​யிட்​டுள்​ளனர்.

‘நெல்லை மாவட்ட பின்​னணி​யில் உரு​வாகும் இப்​படத்​தின் கதை, சங்​கிலி பூதத்​தார், சுடலை மாடன் உள்​ளிட்ட தெய்வ வழிபாடுகளை மைய​மாகக் கொண்டு அமைக்​கப்​பட்​டுள்​ளது. சாதி, மத வேறு​பாடு​களைத் தாண்​டி, தலை​முறை​களாகத் தொடரும் சமூகப் பிரச்​சினை​களை, மக்​களின் ரத்​த​மும் சதையுமான வாழ்க்கைக்குள் சென்று பதிவு செய்​யும் ஆக் ஷன் எமோஷனல் டிரா​மா​வாக இப்​படம் உரு​வாகி​யுள்​ளது. படப்​பிடிப்பு நிறைவடைந்​து, இறு​திக்​கட்​டப் பணி​கள் நடை​பெற்று வருகின்றன” என்​றது படக்​குழு.

நெல்லை மாவட்ட பின்னணியில் அருள்​நிதி - அமீரின் ‘வேட்ட சாமி’
தொழிலதிபர் வீரமணி போக்சோ வழக்கில் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in