’த்​ரிபின்​னா’ சிம்​பொனி இசை ஆல்​ப‌ம்: ஏ.ஆர்​.ரஹ்​மான் வெளியிட்​டார்

’த்​ரிபின்​னா’ சிம்​பொனி இசை ஆல்​ப‌ம்: ஏ.ஆர்​.ரஹ்​மான் வெளியிட்​டார்
Updated on
1 min read

கிராமி விருது பெற்ற வயலின் கலைஞர் கணேஷ் ராஜகோ​பால​னால் கருத்​தாக்​கம் செய்​யப்​பட்ட ‘த்​ரிபின்​னா’ என்ற இந்​திய சிம்​பொனி இசை ஆல்​பத்​தை, இசை அமைப்​பாளர் ஏ.ஆர்​.ரஹ்​மான் வெளி​யிட்​டார்.

இதைத் தொடர்ந்​து, ஸ்வரயோகா குழு​வினருடன் இணைந்து அனிருத்தா பட் மிருதங்​கம் வாசிக்க, ‘த்​ரிபின்​னா’ ஆல்​பத்​தில் உள்ள இசையமைப்​பு​களை கணேஷ் ராஜகோ​பாலன் நேரடி​யாக வாசித்​துக் காட்​டி​னார்.

இந்​நிகழ்ச்​சி​யில் கர்​னாடக இசைக்​கலைஞர்​களான கிருஷ்ணகுமார், பின்னி கிருஷ்ணகு​மார், வயலின் கலைஞர் குமரேஷ், வீணை கலைஞர் ஜெயந்தி குமரேஷ் உள்​ளிட்ட இசை மற்​றும் திரைத் துறையைச் சேர்ந்த பிர​முகர்​கள் கலந்துகொண்டனர்.

“இந்த ‘த்​ரிபின்​னா’ ஆல்​பம், ஸ்வரங்​களை பிரித்​து, பின்​னர் ஒன்றாக இணைக்​கும் பழங்​கால கர்​னாடக இசைக் ​கருத்​தில் இருந்து உரு​வாக்​கப்​பட்​டது. ஆரம்​ப​கால கமகம் கருத்​துகளில் வேரூன்​றிய இந்த ஆல்​பம், ஒரு ராகத்​துக்​குள் பல ஸ்வரங்​களை ஒரே நேரத்​தில் பயன்​படுத்​து​வதை ஆராய்ந்​து, இந்​திய பாரம்​பரிய சூழலில் விரிவான இசை அமைப்​பு​களை உரு​வாக்​கு​கிறது.

இந்த அணுகு​முறை​யின் மூலம், இந்த ஆல்​பம் ராகத்​தின் வெளிப்​பாட்டு எல்​லையை விரிவுபடுத்​து​வதோடு, பாரம்​பரிய​மும் கற்பனை​யும் ஒரு பெரிய இசைக்​களத்​தில் இணை​யும் இந்​திய சிம்பொனியை உரு​வாக்​கு​கிறது. இந்த ஆல்​பம் அனைத்து டிஜிட்டல் தளங்​களி​லும் கிடைக்​கிறது” என்று கணேஷ் ராஜகோபாலன் தெரி​வித்​துள்​ளார்.

’த்​ரிபின்​னா’ சிம்​பொனி இசை ஆல்​ப‌ம்: ஏ.ஆர்​.ரஹ்​மான் வெளியிட்​டார்
ஆந்திராவில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: 2 ரயில் பெட்டிகள் எரிந்து சேதம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in