‘ஹைக்கூ’ முதல் ‘டெலிவரி பாய்’ வரை: இந்த வார தியேட்டர் ரிலீஸ் பட்டியல்

‘ஹைக்கூ’ முதல் ‘டெலிவரி பாய்’ வரை: இந்த வார தியேட்டர் ரிலீஸ் பட்டியல்
Updated on: 
3 min read

கொண்டாட்டத்துக்கு முன்பு தொற்றிக்கொள்ளும் குதூகலம் போல, தீபாவளிக்கு முன்பாக ரசிகர்களின் ரசனைக்கு விருந்து வைக்க இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் பட்டியல் இது.

ஹைக்கு: யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘ஹைக்கு’. இந்தப் படத்தில் ஏகன், ஸ்ரீதேவி அபல்லா, ஃபெமினா ஜார்ஜ், அதிர்ச்சி அருண், சுப்ரமணியன் சேது, மைம் கோபி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஒரு பெண்கள் கல்லூரியில் ஒரே ஒரு ஆண் படிக்கிறான். எப்படி இது சாத்தியம்? எதனால் அப்படி சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று கூறி, 19 வயதில் இருந்து 26 வயது வரை ஒருவரது வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களைச் சொல்கிறது இந்த தமிழ்ப் படம். இப்படம் அக்டோபர் 23 அன்று திரைக்கு வருகிறது.

விடியும் காத்திரு: அரவிந்த ராஜன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘விடியும் காத்திரு’. இந்தப் படத்தில், எம்.எஸ்.பாஸ்கர், அம்ஜதா ஷெரின், கோபி அயோதி, ராகேஷ் ராமநாதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிரபல மருத்துவர் மற்றும் அவர் குடும்பத்துக்கு கொடூர சம்பவம் நடந்த ஓர் இடத்தை பாதுகாக்க இரண்டு அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர்.

இரவு நேரத்தில் அந்த வீட்டில் அந்த அதிகாரிகள் அமானுஷ்ய சக்திகளை எதிர்கொள்கின்றனர். அதனை அவர்கள் எப்படி எதிர்கொண்டனர், அந்த குடும்பத்துக்கு நடந்த மர்மத்தை வெளிக்கொண்டு வந்தனரா எனச் சொல்கிறது படம். இந்த திகில் படம், அக்டோபர் 23 அன்று திரைக்கு வருகிறது.

டெலிவரி பாய்: நானி டார்லா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம், ‘டெலிவரி பாய்’. திண்டுக்கல் ஐ லியோனி மகன் லியோ சிவகுமார், ராதிகா சரத்குமார், பிரிகிடா சாகா, காளி வெங்கட், ஜேசன் திவாகர், மாதேஸ்வரன் செல்லப்பன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அதிகாரியாகும் கனவுடன் தனது தாயை பராமரித்துக் கொண்டே டெலிவரி பாய் வேலை பார்க்கிறான் ஒருவன். சிறுவயது முதலே ஒன்றாக வளர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் ஏழு பேரின் பின்னணியில், அவர்களிடம் எதிர்பாராமல் சிக்கிக்கொள்ளும் அந்த டெலிவரி பாயின் வாழ்க்கை எப்படி மாறுகிறது, அவன் எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன என்பதை படம் பேசுகிறது. இந்த ஆக்‌ஷன் படம், அக்டோபர் 23 அன்று திரைக்கு வருகிறது.

டைட்டானிக்: எம்.ஜானகிராமன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘டைட்டானிக்’. இந்தப் படத்தில், கலையரசன், ஆனந்தி, ராகவ் விஜய், ஆஷ்னா ஜவேரி, காளி வெங்கட், ஜாங்கிரி மதுமிதா, காயத்ரி உள்ளிடோர் நடித்துள்ளனர். சென்னையில் இருந்து பெங்களூருக்கு செல்லும் இரு இளைஞர்களின் பயணம், சாகச பயணமாக மாறுவதைச் சொல்கிறது படம். இந்த காதல் நகைச்சுவைப் படம் அக்டோபர் 23 அன்று திரைக்கு வருகிறது.

418: கீர்த்தன் நடகவுடா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘418’. இந்தப் படத்தில் சைத்ரா ஆச்சார், சரண் லக்கராஜூ, சூர்ய ராஜ் வீரபதினி, பிரீத்தி பகடலா, ஷஷாங் பாடீல்ம் ஸ்ரீவைஷ்ணவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த தெலுங்கு திகில் படம் அக்டோபர் 23 அன்று திரைக்கு வருகிறது.

உடும்பஞ்சோலா விஷன்: சலாம் புகாரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் மலையாள படம் ‘உடும்பஞ்சோலா விஷன்’. மேத்யூ தாமஸ், சித்திக், ஸ்ரீநாத் பாசி, சுதேவ் நாயர், மிலிந்த் சோமன், திலீஸ் போத்தன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த த்ரில்லர் படம் அக்டோபர் 23 அன்று திரைக்கு வருகிறது.

321 லவ் மேரேஜ் vs அரேஞ் மேரேஜ்:  சிலுமுல சாந்தி குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் தெலுங்கு படம் ‘321 லவ் மேரேஜ் vs அரேஞ் மேரேஜ்’. இந்தப் படத்தில், மோஹித் பெடடா, லாவண்யா சஹுகாரா, யாமினி செட்டி, விவான் சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த காதல் நகைச்சுவைப் படம் அக்டோபர் 23 அன்று வெளியாகிறது.

ஒரிஜினல்: ரமீஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘ஒரிஜினல்’. இந்தப் படத்தில் ஸ்ரீநாத் பாசி, அபிராம் ராதாகிருஷ்ணன், ராஜேஷ் மாதவன், சாஃப் போய், பினு பப்பு, ஃபெமினா ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த அறிவியல் புனைக்கதை படம்  அக்டோபர் 23 அன்று வெளியாகிறது.

க்ரைம் 302: சஜீர் சைனுதீன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மலையாள படம் ‘க்ரைம் 302’. இதில் சித்திக், சஜு  நவோதயா, சுதீர் சுகுமரன், ஜசீலா பர்வீன், தினேஷ் பணிக்கர், ஸ்ரீ சரண்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  இந்த த்ரில்லர் படம் அக்டோபர் 23 அன்று வெளியாகிறது.

‘ஹைக்கூ’ முதல் ‘டெலிவரி பாய்’ வரை: இந்த வார தியேட்டர் ரிலீஸ் பட்டியல்
The President’s Cake: லாமியாக்களின் கண் சிமிட்டல்களில்... | திரை தேவதைகள் 40

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in