

இயக்குநர் ஏ.ஜே.பாலகிருஷ்ணன்
‘காமராஜ்’, ‘வெல்கம் பேக் காந்தி’ திரைப் படங்களைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ், ‘திருக்குறள்’ திரைப்படத்தைக் கடந்த ஆண்டு தயாரித்து வெளியிட்டது. இதை ஏ.ஜே.பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார்.
பாராட்டைப் பெற்ற இப்படத்தின் தொடர்ச்சியாகத் திருக்குறள் படத்தில் இடம்பெறாத மேலும் பல கருத்துகளை வலியுறுத்தி அப்படத்தின் 2-ம் பாகம் தயாராகிறது. விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் வழங்க, ரமணா கம்யூனிகேஷன்ஸ் தயாரிக்கிறது.
இதுகுறித்து இயக்குநர் பாலகிருஷ்ணன் கூறும்போது, “பெருமை வாய்ந்த நமது தமிழ்ப் பண்பாட்டை திருக்குறள் வாயிலாக உலகுக்குப் பறை சாற்றுவதே இப்படத்தின் நோக்கம். இதில் திருவள்ளுவர் காலத்தில் வாழ்ந்த மேலும் பல ஆளுமைகள், கலாச்சாரத் தொடர்புகள், வணிகத் தொடர்பு, தமிழர்களின் சங்க கால பண் பட்ட நாகரீகம் படமாக்கப்பட உள்ளது.
ஹாலிவுட் கலைஞர்களின் பங்களிப்பும், செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பமும் பயன்படுத்தப்பட உள்ளது. ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்” என்றார்.