“நடிகர் சூர்யா போல...” -  விநியோகஸ்தர் சக்திவேலன் நெகிழ்ச்சிப் பகிர்வு

“நடிகர் சூர்யா போல...” - விநியோகஸ்தர் சக்திவேலன் நெகிழ்ச்சிப் பகிர்வு

Published on

“வன்மம் நிறைந்த உலகில் சூர்யா போல் ஒரு ஹீரோ இல்லை” என்று விநியோகஸ்தர் சக்திவேலன் பேசினார்.

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வா வாத்தியார்’. நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, ராஜ்கிரண், சத்யராஜ், கருணாகரன், கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பல மாதங்களாக தயாரிப்பில் இருக்கும் இப்படம் டிசம்பர் 12-ம் தேதி வெளியாகவுள்ளது.

இதன் விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன், திரையுலக பிரபலங்களும் கலந்துக் கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சியில் விநியோகஸ்தர் சக்திவேலன் பேசிய போது, “திருப்பதி வந்தால் திருப்பம் என்பார்கள். ஆனால் எனக்கு அது கார்த்தி சார் தான். என் திரை வாழ்க்கையில் அவரது 27 படங்களில், கிட்டதட்ட 15 படங்கள் வரை செய்துள்ளேன் எனக்கு நிறையத் திருப்பம் தந்துள்ளார்.

கார்த்தி சார் தனது படங்களில் சின்ன சின்ன விஷயத்திற்கும் அவ்வளவு சிரத்தை எடுத்துக்கொள்வார். அவர் எம் ஜி ஆரை எடுத்து நடிக்கும் போது எவ்வளவு அர்ப்பணிப்பாக உழைத்திருப்பார்எனத் தெரியும்.

ஞானவேலின் அப்பா தீவிர எம் ஜி ஆரின் ரசிகர். அவர் எடுத்திருக்கும் படம். அவருக்குச் சமீபத்தில் நிறையப் பிரச்சனை வந்தது. சூர்யா சார் கூப்பிட்டு இதைச் செய்து, உன் பிரச்சனையை தீர்த்துக்கொள் என்று சொல்லியிருக்கிறார். வன்மம் நிறைந்த உலகில் சூர்யா போல் ஒரு ஹீரோ இல்லை. ’வா வாத்தியார்’ படம் மூலம் ஞானவேல் சாருக்கு எல்லாம் மாறும்.

நலன் இரண்டு படம் செய்துள்ளார். இரண்டுமே கல்ட் படம். ’வா வாத்தியார்’ ரிலீஸான மறுநாளே கல்ட் படம் எனச் சொல்லி விடுவார்கள். ’வா வாத்தியார்’ இந்த வருடத்தில் மிகப் பெரிய வெற்றிப்படமாக இருக்குமென நம்புகிறேன்” என்று பேசினார் விநியோகஸ்தர் சக்திவேலன்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in