

‘துரந்தர் 2’ மற்றும் ‘யூத்’ ஆகிய படங்களின் வசூலால் திரையரங்க உரிமையாளர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தமிழக திரையரங்க உரிமையாளர்கள் எதிர்பார்த்த பெரும் வசூல் எந்தவொரு படத்துக்குமே அமையவில்லை. முதலாவதாக ‘தாய் கிழவி’ படத்தின் வசூல் மிகுந்த உற்சாகத்தை அளித்தது. அப்படத்தின் வசூல் இந்தாண்டு அதிக வசூல் செய்த படம் என்ற பெரும் சாதனையை படைத்துள்ளது.
தற்போது ‘துரந்தர் 2’ மற்றும் ‘யூத்’ ஆகிய படங்களின் வசூலால் மீண்டும் திரையரங்க உரிமையாளர்கள் உற்சாகமாகி இருக்கிறார்கள். தமிழகத்தில் ‘துரந்தர் 2’ படத்தின் இந்தி பதிப்பு திட்டமிட்ட்டப்படி வெளியானது. ஆனால், தமிழ் பதிப்பு இரண்டு நாட்கள் தாமதாகவே வெளியானது. அந்தச் சமயத்தில் வெளியான ‘யூத்’ படம் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
இதனால் ‘துரந்தர் 2’ மற்றும் ‘யூத்’ ஆகிய இரண்டு படங்களுமே நல்ல வசூல் செய்து வருகிறது. குறிப்பாக ‘துரந்தர் 2’ தமிழ் பதிப்பின் வசூல் யாருமே எதிர்பாராத அளவுக்கு இருப்பதால், திரையரங்க உரிமையாளர்கள் பெரும் உற்சாகமாகி இருக்கிறார்கள். தமிழகத்தில் மட்டுமன்றி உலகளவில் மாபெரும் வசூல் செய்து வருகிறது ‘துரந்தர் 2’.