’AK64’ படத்தின் தயாரிப்பாளர் முடிவு

’AK64’ படத்தின் தயாரிப்பாளர் முடிவு
Updated on
1 min read

அஜித்தின் அடுத்த பட தயாரிப்பாளர் யார் என்பது முடிவாகி இருக்கிறது. ‘குட் பேட் அக்லி’ படத்தினை தொடர்ந்து, அஜித்தின் அடுத்த படத்தினையும் இயக்கவுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். இதன் பணிகள் நடைபெற்று வந்தாலும், தயாரிப்பாளர் யார் என்பது முடிவாகாமல் இருந்தது.

இதற்கு முக்கிய காரணம், அஜித் கேட்கும் சம்பளம் என்று தகவல்கள் வெளியாகின. தமிழ், தெலுங்கு, இந்தி என முன்னணி தயாரிப்பாளர்கள் பலரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

இறுதியாக அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் இணையும் படத்தினை தயாரிக்க முன்வந்துள்ளார் அனில் சுக்ரா. இவர் தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர் மற்றும் பைனான்சியர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சம்மதம் தெரிவித்திருப்பதால், அஜித்தின் அடுத்த படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது அஜித்துடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இப்படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகி இருக்கிறார். ‘குட் பேட் அக்லி’ படம் போல் அல்லாமல், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் இப்படத்தின் கதையினை உருவாக்கி இருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.

’AK64’ படத்தின் தயாரிப்பாளர் முடிவு
‘ஹி இஸ் பிரெக்​னன்ட்’ என்ன கதை?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in