சிம்புவை இயக்கவுள்ள ‘ட்யூட்’ இயக்குநர்?

சிம்புவை இயக்கவுள்ள ‘ட்யூட்’ இயக்குநர்?
Updated on
1 min read

சிம்பு நடிக்கவுள்ள புதிய படத்தினை ‘ட்யூட்’ இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

வெற்றிமாறன் இயக்கி வரும் ‘அரசன்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு. அதனைத் தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கவுள்ள படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார். இப்படங்களை முடித்தவுடன் ‘ட்யூட்’ இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார் சிம்பு.

‘ட்யூட்’ படத்தினை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தினை தயாரிக்க முன்வந்துள்ளது. சிம்புவின் தேதிகள் முடிவானவுடன் ஒப்பந்தமாக கையெழுத்திட முடிவு செய்திருக்கிறது. சிம்பு – கீர்த்தீஸ்வரன் சந்திப்பு முடிவடைந்து, அவர் கூறிய கதை சிம்புவுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்தாண்டு இறுதியில் படப்பிடிப்புக்கு செல்வார்கள் என தெரிகிறது.

பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘ட்யூட்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கீர்த்தீஸ்வரன். அப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றதால் அந்த இயக்குநரின் அடுத்த படத்தையும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமே தயாரிக்க முன்வந்துள்ளது.

சிம்புவை இயக்கவுள்ள ‘ட்யூட்’ இயக்குநர்?
மீண்டும் இணைகிறது ‘இருமுகன்’ கூட்டணி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in