

‘லாரா’ படத்தைத் தொடர்ந்து எம்.கே.ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் தயாரிக்கும் படம், ‘அறுவடை’. எம்.கார்த்திகேசன் இயக்கி, ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் நாயகியாக சிம்ரன் ராஜ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் சரவணன், ராஜசிம்மன், கஜராஜ், அனுபராமி கவிதா, தீபா பாஸ்கர் நடிக்கிறார்கள். ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ரகு ஸ்ரவண் குமார் இசை அமைத்துள்ளார்.
கிராமப்புற மக்களின் வாழ்வியல் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் உருவாகும் இப்படக் குழுவினர், கோயம்புத்தூரில் பொங்கல் விழா கொண்டாடிப் படப்பிடிப்பை முடித்துள்ளனர். இப்படம் பற்றி இயக்குநர் கார்த்திகேயன் கூறும்போது,
“சாதாரண மனிதனின் வீட்டில் நடைபெறும் சிறிய பிரச்சினை, பெரிய சிக்கலாக உருவெடுத்து சமூகத்தை எப்படி சீரழிக்கிறது என்பது திரைக்கதை. ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்ற தத்துவத்தை மையப்படுத்தி இப்படத்துக்கு ‘அறுவடை’ என டைட்டில் வைத்துள்ளோம்” என்றார்.