

நடிகர் ஜீவா நடித்துள்ள திரைப்படம், ‘தலைவர் தம்பி தலைமையில்’. இது அவரது 45-வது படம். இயக்குநர் நிதிஷ் சஹதேவ் இயக்கியுள்ள இதில், பிரார்த்தனா, தம்பி ராமையா, இளவரசு, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்குவிஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார்.
இதன் டீஸர் வெளியாகி வரவேற்பைப் பெற்றநிலையில், இப்படம் ஜன. 30-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பொங்கல் பண்டிகை வெளியீடாக ஜன. 15- ம் தேதி இப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் ‘ஜனநாயகன்’ தணிக்கை சான்றிதழ் பிரச்சினையால் வெளியாகாததால், ஜீவாவின் இந்த ‘தலைவர் தம்பி தலைமையில்’ மற்றும் ரிச்சர்ட் ரிஷியின் ‘திரவுபதி 2’ ஆகிய திரைப்படங்கள் பொங்கலுக்கு வெளியாகின்றன.