‘குறுக்கு வழியில புகழ் பெறணும்னு நினைக்கிறாங்க!’ - ‘டெக்ஸாஸ் டைகர்’ செல்வகுமார் திருமாறன் வருத்தம்

‘குறுக்கு வழியில புகழ் பெறணும்னு நினைக்கிறாங்க!’ - ‘டெக்ஸாஸ் டைகர்’ செல்வகுமார் திருமாறன் வருத்தம்
Updated on
2 min read

கவனம் பெற்ற ‘ஃபேமிலி படம்’ திரைப்​படத்தை இயக்​கிய செல்​வகு​மார் திரு​மாறன், அடுத்து இயக்​கி​யிருக்​கும் திரைப்​படம், ‘டெக்​ஸாஸ் டைகர்’. இப்​படத்​தின் டைட்​டில் டீஸரே அதிக எதிர்​பார்ப்பை ஏற்​படுத்தி இருந்த நிலை​யில், படப்​பிடிப்பை முடித்​து​விட்டு போஸ்ட் புரொடக் ஷனில் தீவிர​மாக இருக்​கிறது, டீம்! செல்​வகு​மார் திரு​மாறனிடம் பேசினோம்.

Q

‘டெக்​ஸாஸ் டைகர்​’... எதுக்கு இப்​படி ஒரு டைட்​டில்?

A

இப்போ சோஷியல் மீடி​யால சிலர் அவங்​களுக்​குன்னு அடைமொழியோட ‘புரொஃபைல்’ பெயர் வச்​சிருப்​பாங்​கள்ல, அப்​படியொரு பெயர்​தான் ‘டெக்​ஸாஸ் டைகர்’. அந்த பெயருக்​குள்​ள​யும் கதைப்​படி ஒரு விஷ​யம் இருக்​கும். இப்ப சமூக ஊடக மோகத்​துல இருக்​கிற பெரும்​பாலானவங்க குறுக்கு வழி​யில புகழ்​பெறணும்னு நினைக்​கிறாங்க. அதுக்​காக தங்​களோட நிஜ​மான திறமையை விட்​டுட்​டு, போலி​யான விஷ​யங்​களை பண்ண ஆரம்​பிக்​கிறாங்க.

அதிலிருந்து வெளியே வந்​து, உங்க திறமை​யைக் கண்​டு​பிடிச்​சு, உங்​களை நீங்க உணரணும்ங்​கறதை இதுல சொல்​றோம். எப்​படி​யா​வது புகழ் கிடைச்சா போதும்னு நினைக்​கிற ஹீரோ, ஓர் இசைக் கலைஞர். சரி​யான வார்த்​தைகள், வழக்​க​மான இசையை அமைச்சு பாடல் உரு​வாக்​கு​னா, புகழ் பெற முடி​யாதுன்னு நினைக்​கிறார். அதுக்கு அவர் என்ன பண்​றார்; அதனால அவருக்கு என்ன பிரச்​சினை வருதுங்​கறது​தான் படம்.

Q

ரொம்ப டிரெண்​டிங்​கான சப்​ஜெக்டா இருக்​கே..?

A

உண்​மை​தான். இப்போ சோஷியல் மீடி​யால நம்ம கண்​ணுக்கு தெரிஞ்சு நிறைய வெறுப்​பு​களை அத்​து​மீறி பரப்​புறாங்​கள்ல, அதை எப்​படி கடந்து போகலாம், அதை எதிர்​கொள்​றதுங்கற விஷ​யத்​தை​யும் இதுல பேசி​யிருக்கோம். இன்​றைய இளைஞர்​கள் எல்​லோருமே இந்​தக் கதையோட ‘கனெக்ட்’ பண்​ணிக்க முடி​யும். படத்​துல எல்லா வித​மான எமோஷன்​ஸும் இருக்​கு.

இதோட கதை, இங்க ஆரம்​பிச்சு இப்​படி முடியணும்னு நாங்க முடிவு பண்​ணாம, திரைக்​கதையை எழு​தி​யிருக்​கோம். அதாவது, கதா​பாத்திரப் பின்​னணி​யில படம் நகரும். ஒரு கதா​பாத்​திரம் தன்​னோட பயணத்தை எங்க ஆரம்​பிக்​குது; அப்​புறம் என்ன சிக்​கலை சந்​திக்​குது? அதுல இருந்து எப்​படி மீளுதுன்​னு?ன்னு திரைக்​கதை இருக்​கும்.

Q

ஹீரோவா ஹிருது ஹாரூணை எப்​படி தேர்வு செஞ்​சீங்க?

A

இந்த கதைக்கு 24-25 வயசுள்ள ஒரு ஹீரோ வேணும். அப்​படி​யான ஹீரோவைத் தேடினேன். பிரதீப் ரங்​க​நாதன், கென் கருணாஸ் மாதிரி சிலர் இருக்​காங்க. அடுத்த கட்​டத்​துல இதே மாதிரி இளம் நடிகர்​கள் யார் இருக் காங்​கன்னு பார்த்​தா, யாருமே இல்​லை.

அல்​லது 35 வயசுக்கு மேல இருக் கிற ஹீரோவை கிளீன் ஷேவ் பண்​ணி, 25 வயசு பையனா காட்​டுறது கடினமா இருந்​துச்​சு. அதனால அடுத்​தக்​கட்​டமா யாருன்னு யோசிச்​சப்ப, ஹிருது ஹாருண் மனசுல வந்​தார். அவர் இந்த கேரக்​டருக்கு சரியா பொருந்​தி​யிருக்​கார்.

Q

கதை முழு​வதும் சோஷி​யல் மீடியா பத்​தி​தான் போகு​மா?

A

இல்​லை. இதுல இசைக்கு முக்​கி​யத்​து​வம் இருக்​கு. நாம 90- கள்ல ஒரு மாதிரி​யான இசையை கேட்​டிருப்​போம். இப்ப என்ன மாதிரி​யான இசையை கேட்​டுக்​கிட்​டிருக்​கோம்? இது ரெண்​டுக்​கும் என்ன வித்​தி​யாசம் இருக்​கு? இப்போ இருக்​குறது உண்​மை​யிலேயே மியூஸிக்​தா​னா? இல்​லைனா அது சும்மா கடந்து போகிற விஷயமா மாறிடுச்​சா? இந்த மாதிரி விஷ​யங்​களை​யும் பேசி​யிருக்​கோம். அதே நேரம் சமூக ஊடகங்​களோட நன்​மை, தீமை பற்​றி​யும் சொல்​லி​யிருக்​கோம். கதைக்​குள்ள நிறைய லேயர் இருக்​கும்.

இப்ப ஒரு புகைப்​படத்தை சமூக ஊடகத்​துல போஸ்ட் பண்​ணும்​போதோ, இல்லை ஏதாவது ஒரு விஷ​யத்தை பகிரும்​போதோ, நிறைய நெகட்​டிவ் கருத்​துகள் வரும். யாரோ ஒருத்​தர் ஏதாவது திட்டி கருத்​தைப் போடு​வாங்க. யார் இப்​படி போட்​டிருக்காங்கன்னு போய் பார்த்​தா, அது ஃபேக் ஐ.டி.​யாக இருக்​கும். ஆனா, அந்த எதிர்​மறை கருத்​து. நம்​மோட அன்​றைய நாளை முழுசா கொன்​னுரும். நாம கடுப்​பாகறது மட்​டுமில்​லா, நம்ம பக்​கத்​துல இருக்​கறவங்​களை​யும் நாம பாடாய்​படுத்​து​வோம்ல, இது​தான் இந்​தக் கதைக்​கான ஆரம்​பமா இருந்​துச்​சு.

Q

நீங்க இயக்​கிய ‘ஃபேமிலி படம்’ திரைப்​படத்தை உங்க ஃபேமிலி​தான் தயாரிச்​சாங்​க... இந்​தப் படம் எப்​படி?

A

‘ஃபேமிலி படத்​’தை நாங்க ஃபேமிலியா தயாரிச்​சதைப் பார்த்​துட்டு ‘நானும் உங்க ஃபேமிலிக்​குள்ள ஒருத்​தரா வரேன்​’னு ஆசைப்​பட்டு ஒரு நண்​பர் முதலீட்​டோட வந்​தார். நாங்​களே அதற்கு முழு பொறுப்​பை​யும் ஏத்​துக்​கிட்டு இந்​தப் படத்தை முடிச்​சிருக்​கோம். ஷூட்​டிங் முடிஞ்​சிருச்​சு.

அக்​டோபர்ல ரிலீஸ்க்கு பிளான் பண்​ணிருக்​கோம். இதுல சம்​யுக்தா விஸ்​வ​நாதன், ரோகிணி, சாச்​ச​னா, அந்​தோணி தாசன், ‘பிக் பாஸ்’ சம்​யுக்​தான்னு நிறைய பேர்​ நடிச்​சிருக்​காங்​க. கண்​டிப்​பா இந்​தப்​ படம்​ எல்​லோருக்​கும்​ பிடிக்​கிற வித​மா இருக்​கும்​.

‘குறுக்கு வழியில புகழ் பெறணும்னு நினைக்கிறாங்க!’ - ‘டெக்ஸாஸ் டைகர்’ செல்வகுமார் திருமாறன் வருத்தம்
காந்தா: ‘ஜெயிலர் 2’-வில் வித்யா பாலன் கதாபாத்திரம் அறிமுகம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in