

’ஃபேமிலி படம்’ படத்தை இயக்கிய செல்வகுமார் திருமாறன், அடுத்து இயக்கும் படம், ‘டெக்ஸாஸ் டைகர்’. இதில், ஹிருது ஹாருண் நாயகனாக நடிக்கிறார். யுகே ஸ்குவாட் நிறுவனம் சார்பில் சுஜித், பாலாஜிகுமார், பாரதிகுமார், செல்வகுமார் திருமாறன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
இதில், சம்யுக்தா விஸ்வநாதன், ரோகிணி, சாச்சனா, வாஃபா கதீஜா, பீட்டர் கே, பார்த்திபன் குமார், அந்தோணி தாசன், சம்யுக்தா ஷான் நடித்துள்ளனர். ஓஷோ வெங்கட் இசை அமைத்துள்ள இப்படத்துக்கு விஷ்ணு மணி வடிவு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சென்னையை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பார்வையை படக்குழு வெளியிட்டுள்ளது. இது இணையத்தில் வைரலாகி வருகிறது.