தமிழில் அறிமுகமாகிறார் தெலுங்கு நடிகர் ராம் நிதின்

தமிழில் அறிமுகமாகிறார் தெலுங்கு நடிகர் ராம் நிதின்
Updated on: 
1 min read

அறி​முக இயக்​குநர் கார்த்​திக் ஜெய் பழனி இயக்​கும் படத்​தில் தெலுங்கு நடிகர் ராம் நிதின் கதாநாயக​னாக நடிக்​கிறார். தெலுங்​கில் ‘மேட்’, ‘மேட் ஸ்குயர்’ படங்​களில் நடித்​துள்ள அவர், இப்​படம் மூலம் தமி​ழில் அறி​முக​மாகிறார்.

இதில் பிரார்த்தனா நாதன், தேஜு அஸ்வினி நாயகி​களாக நடிக்​கின்​றனர். இதை, ‘பார்க்​கிங்’ படத்​தைத் தயாரித்த சோல்​ஜர்ஸ் ஃபேக்​டரி நிறு​வனத்​தின் கே.எஸ்.சினிஷ், ரெடாக்​டட் ஸ்டூடியோஸுடன் இணைந்து தமிழ், தெலுங்​கில் தயாரிக்​கிறது. காதலை மைய​மாகக் கொண்ட இப்​படம் கமர்​ஷியல் அம்​சங்​களு​டன் தயாராகிறது. இதன் தலைப்பு மற்​றும் இதர தொழில்​நுட்​பக் கலைஞர்​கள் குறித்த அறி​விப்​பு​கள் விரைவில் வெளியாகும் என படக்​குழு தெரி​வித்​துள்​ளது.

தமிழில் அறிமுகமாகிறார் தெலுங்கு நடிகர் ராம் நிதின்
‘எங்களின் அழகான ஆண் குழந்தை...’ - நடிகை சமந்தா பகிர்வு

X