திரை எழுத்தாளர்களுக்காக ஸ்வான் அகாடமி

திரை எழுத்தாளர்களுக்காக ஸ்வான் அகாடமி
Updated on: 
1 min read

தென்​னிந்​திய திரை எழுத்​தாளர்​கள் சங்​கம், ஐபி கிளைம்ப் உடன் இணைந்து ஸ்வான் அகாட​மியை சென்​னை​யில் தொடங்​கி​யுள்​ளது. வளர்ந்து வரும் கதைசொல்​லிகள் மற்​றும் திரைக்​கதை எழுத்​தாளர்களுக்கு முறை​யான பயிற்​சி​யும் வழி​காட்​டு​தலும் வழங்​கும் வகை​யில் இந்த அகாடமி வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது.

இயக்​குநர் சேரன், பட்​டுக்​கோட்டை பிர​பாகர், ஆர்​.சுந்​தர்​ராஜன், சமுத்​திரக்​க​னி, சினேகன் உள்​ளிட்​டோர் தலை​மை​யில் செயல்​படும் இந்த அமைப்​பின் தொடக்க விழாவை முன்​னிட்​டு, சென்னை அண்ணா நூற்​றாண்டு நூல​கத்​தில் சிறப்பு நிகழ்ச்சி நடத்​தப்​பட்​டது. இதில் 300-க்​கும் மேற்​பட்ட வளர்ந்து வரும் திரை எழுத்​தாளர்​கள் மற்​றும் பிரபலங்​கள் பங்​கேற்​றனர்.

சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்ற லோகேஷ் கனக​ராஜ், தனது எழுத்​துப் பயண அனுபவங்​களை​யும், திரைக்​கதை உரு​வாக்​கம் தொடர்​பான கருத்​துகளை​யும் பகிர்ந்து கொண்​டார். புதி​தாகத் தொடங்​கப்​பட்ட இந்த அகாட​மி​யின் லோகோ மற்​றும் பாடத்​திட்​டத்​தை​யும் அவர் வெளி​யிட்​டார்.

ஐபி கிளைம்ப் நிறுவன தலைமை செயல் அதி​காரி ஜி.கே.திரு​நாவுக்​கரசு, லோகேஷ் கனக​ராஜ் பங்​கேற்ற சிறப்பு கலந்​துரையாடல் நிகழ்ச்​சி​யும் நடை​பெற்​றது. நவீன கதை சொல்​லல் குறித்த விரி​வான புரிதலை வழங்​கும் வகை​யில் பல்​வேறு சிறப்பு அமர்​வு​களும் நடை​பெற்​றன. பாடலாசிரியர் மதன் கார்க்​கி, இயக்​குநர் லீனா மணிமேகலை, மலை​யாள எழுத்​தாளர், இயக்​குநர் அனு​ராஜ் மனோகர், எழுத்​தாளர் எஸ்​.​ராமகிருஷ்ணன் உள்​ளிட்டோர் பல்​வேறு தலைப்​பு​களில் சிறப்​புரையாற்​றினர்.

திரை எழுத்தாளர்களுக்காக ஸ்வான் அகாடமி
"சினிமா வேண்டாம் என யோசித்தேன்" - முதல் பட தோல்வியை நினைவுகூர்ந்த ஃபஹத் பாசில்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in