‘குரு த மென்டர்’ ஜென் ஸி-க்கான படம்: சுரேஷ் சந்திரமேனன் தகவல்

‘குரு த மென்டர்’ ஜென் ஸி-க்கான படம்: சுரேஷ் சந்திரமேனன் தகவல்
Updated on: 
1 min read

நடிகரும் இயக்​குநரு​மான சுரேஷ் சந்​திர மேனன் ‘புதிய முகம்’ படம் மூலம் தமிழ் ரசிகர்​களிடையே பிரபலமானவர். தொடர்ந்து ‘பாசமலர்​கள்’ என்ற படத்​தைத் தயாரித்து இயக்​கினார். பின்​னர், தானா சேர்ந்த கூட்​டம், ஜுங்கா, காளிதாஸ் உள்​பட பல திரைப்​படங்​களில் நடித்​துள்ள அவர், சென்னை போக்​கு​வரத்​துத் திட்​ட​மிடல் நிபுணராகவும் இருக்​கிறார். அவர் நீண்ட இடைவெளிக்​குப் பிறகு இயக்​கி​யுள்ள படம், ‘குரு த மென்​டர்’.

இப்​படம் பற்றி அவர் கூறும்​போது, ‘‘இது ஜென்ஸி தலைமுறைக்​கான திரைப்​படம். இதில் 10 பெண்​கள், 10 ஆண்​கள் என 20 புது​முகங்​களை அறி​முகப்​படுத்து​கிறேன். நான் ஓய்வு பெற்ற ராணுவ அதி​காரி குரு​வாக வரு​கிறேன். கிராமப் புறங்​களில் இருந்து 20 பேரை சென்​னைக்கு அழைத்து வந்து அவர்​களை என்​னவாக உரு​வாக்​கு​கிறேன், எப்​படி மாற்​றுகிறேன், அதில் ஏற்​படும் சவால்​கள் என்ன என்​ப​து​தான் படம்.

இன்​றைய தலைமுறைக்கு அறி​வுரை சொன்​னாலோ, போதித்​தாலோ பிடிக்​காது. அத​னால் அவர்​களுக்கு ஏற்​றவகை​யில் இந்​தப் படத்தை உரு​வாக்கி இருக்​கிறேன். இதில் ரொமான்ஸ் விஷயங்​கள் இருக்​காது. அதே போல இந்​தப் படத்​தை, குறிப்​பிட்ட ஜானருக்​குள்​ளும் அடக்க முடி​யாது. 33 வருஷத்​துக்​குப் பிறகு மீண்​டும் இயக்​குநராகி இருக்​கிறேன்.

கடந்த சில வருடங்​களாக, நல்ல திரைப்​படங்​களை மக்​கள் திரையரங்​குக்கு வந்து பார்க்​கிறார்​கள். அத​னால்​தான் எனக்​கும் மீண்​டும் படம் இயக்க நம்​பிக்கை வந்​தது. படப்​பி​டிப்பு முடிவடைந்​து​விட்​டது. டிசம்​பரில் வெளி​யிடத் திட்​ட​மிட்​டுள்​ளோம்” என்​றார்.

‘குரு த மென்டர்’ ஜென் ஸி-க்கான படம்: சுரேஷ் சந்திரமேனன் தகவல்
‘ராமாயணா’ படத்துக்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

X