

ரஜினி, இயக்குநர் சுதா கொங்காரா
ரஜினியை வைத்து காதல் படமொன்றை இயக்க ஆசைப்படுவதாக இயக்குநர் சுதா கொங்காரா தெரிவித்துள்ளார்.
சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பராசக்தி’. டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் ஜனவரி 10-ம் தேதி வெளியாகவுள்ளது. இதன் இசை வெளியீட்டு விழா ஜனவரி 3-ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
‘பராசக்தி’ படத்தினை விளம்பரப்படுத்த பேட்டிகள் அளித்து வருகிறார் சுதா கொங்காரா. இதில் ரஜினியை வைத்து காதல் படமொன்றை இயக்கவிரும்புவதாக கூறியிருக்கிறார்.
அப்பேட்டியில், “ஒரு முழுமையான காதல் படம் பண்ண வேண்டும் என்பது ஆசை. அதிலும் ரஜினி சாரை வைத்து ‘முதல் மரியாதை’ மாதிரி ஒரு காதல் படம் பண்ண வேண்டும் என்பது ஆசை. நான் அவருடைய தீவிர ரசிகை.
அதற்கான கதையைக் கூட எழுதி வைத்துள்ளேன். அக்கதையை இப்போது எடுத்து மீண்டும் முழுமையாக உருவாக்க வேண்டும். இது போக காதலை மையமாக கொண்ட ஒரு தெலுங்கு நாவலை படித்தேன். அந்த நாவலையும் படமாகப் பண்ண வேண்டும் என்று ஆசை இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.