

பிரபல இசையமைப்பாளர் தேவா கடந்த அக்.17-ம் தேதி காலமானார். அவருடைய பிறந்தநாளான நவ.20-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா மற்றும் குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் இளையராஜா, தேவாவின் உருவப் படத்தைத் திறந்து வைத்தார். தேவாவின் இசைப் பங்களிப்பைப் போற்றும் வகையில் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அமைச்சர்கள் ராஜ்மோகன், ஸ்ரீநாத், வன்னி அரசு, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தமிழ்க்குமரன், நடிகர் சங்கத் தலைவர் நாசர், இயக்குநர் சங்கத் தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, அமைச்சர்களிடம் தேவாவுக்கு மணி மண்டபம், தேவா வசித்த தெருவுக்கு அவர் பெயரை வைப்பது, நவ.20-ம் தேதியைக் கானா தினம் என அறிவிப்பது ஆகிய கோரிக்கைகளை வைத்தார்.