ரவி மோகன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

ரவி மோகன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்
Updated on
1 min read

ரவி மோகன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார் ரவி மோகன். அதன் மூலம் ‘ப்ரோ கோட்’ மற்றும் ‘An Ordinary Man’ என்ற இரண்டு படங்கள் அறிவிக்கப்பட்டது. இதில் யோகி பாபு நடிக்கும் ‘An Ordinary Man’ படத்தினை ரவி மோகனே இயக்கி, தயாரிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

தற்போது ‘An Ordinary Man’ படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இயக்குராகவும் அறிமுகமாகவுள்ளார் ரவி மோகன். நகைச்சுவையுடன் கூடிய சமூகக் கருத்துக்கள் கொண்ட படமாக இது உருவாகிறது. இதன் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் ஒளிப்பதிவாளராக விவான் ஆம்பரோஸ், இசையமைப்பாளராக ஹைட்ரோ, கலை இயக்குநராக செளந்தர், ஆடை வடிவமைப்பாளராக பிரவீன் ராஜ் உள்ளிட்டோர் பணிபுரியவுள்ளனர். இதில் யோகி பாபு உடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதை படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை.

ரவி மோகன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்
கெளதம் ராம் கார்த்திக்கின் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ டீஸர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in