கீர்த்தி சுரேஷ் - மிஷ்கின் நடிக்கும் ‘சத்தியவான் சாவித்திரி’ ஜூலை 24-ல் ரிலீஸ்

கீர்த்தி சுரேஷ் - மிஷ்கின் நடிக்கும் ‘சத்தியவான் சாவித்திரி’ ஜூலை 24-ல் ரிலீஸ்
Updated on
1 min read

சென்னை: கீர்த்தி சுரேஷ், இயக்குநர்-நடிகர் மிஷ்கின் இணைந்து நடிக்கும் ‘சத்தியவான் சாவித்திரி’ வரும் ஜூலை 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

புதுமுக இயக்குனர் பிரவீன் எஸ். விஜய் இயக்கியுள்ள இப்படத்தில், கீர்த்தி சுரேஷ் இளம் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு சீனியர் வழக்கறிஞராக மிஷ்கின் நடித்துள்ளார். ஒரு முக்கிய வழக்கில் தவறான நபர்களுக்கு ஆதரவாக செயல்படும் தனது சீனியர் மிஷ்கினை, கீர்த்தி சுரேஷ் சட்ட ரீதியாக எப்படி எதிர்கொள்கிறார் என்பதை மையமாக இப்படம் உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படம் வரும் ஜூலை 24 வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு, சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவையும், ஜி.கே.பிரசன்னா படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். இவர்களுடன் பால சரவணன், ஷில்பா மஞ்சுநாத், மதுசூதனன், ஆர். சுந்தரராஜன், பிரிகிடா, மாலா பார்வதி மற்றும் ஏ. வெங்கடேஷ் உள்ளிட்டோர் இதில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

கீர்த்தி சுரேஷ் - மிஷ்கின் நடிக்கும் ‘சத்தியவான் சாவித்திரி’ ஜூலை 24-ல் ரிலீஸ்
‘ஓம்’ - ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் தலைப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in