

சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவாகி இருக்கும் படத்துக்கு ‘சிக்னல் அட் 11.30’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் பவ்யா திரிகா, பூஜிதா பொன்னாடா, ஜெயப் பிரகாஷ், முனீஷ்காந்த் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை அலர் ஸ்டூடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன், டாக்டர் ஷிவானி சுப்பிரமணி தயாரித்துள்ளனர். டி.இமான் இசை அமைக்கும் இப்படத்தை மலர்விழி நடேசன் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது. “இரவு 11.30 மணிக்கு ஒரு சிக்னலில் கதாநாயகனுக்கு நேரும் எதிர்பாராத சம்பவம் அவனுடைய வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பது கதை” என்றது படக்குழு.