இன்ஸ்டாகிராம் பாலோயர்ஸ்களை முன்வைத்து சம்பளம்: ஷா ரா வெளியிட்ட வேதனை பகிர்வு வைரல்

இன்ஸ்டாகிராம் பாலோயர்ஸ்களை முன்வைத்து  சம்பளம்: ஷா ரா வெளியிட்ட வேதனை பகிர்வு வைரல்
Updated on
1 min read

இன்ஸ்டாகிராம் பாலோயர்ஸ்களை முன்வைத்து சம்பளம் பேசப்படுவதாக ஷா ரா வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

நேற்றில் இருந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் ஷா ரா வெளியிட்ட வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. அந்த வீடியோ பதிவில், “இப்போது படத்துக்கு பேசுபவர்கள் அனைவரும் இன்ஸ்டாகிராமில் எவ்வளவு பாலோயர்ஸ் இருக்கிறார்கள் என்பதை வைத்து தான் சம்பளமே பேசுகிறார்கள். இன்ஸ்டாகிராமில் பாலோயர்ஸ்களை அதிகரிப்பதற்கு என்னிடம் தகுதி இல்லையே.

எனக்கு முடி இல்லை, தாடி இருக்கிறது, ரீல்ஸ் பண்ணவும் பிடிக்காது. எனக்கு இன்ஸ்டாகிராமில் பாலோயர்ஸ்களை கூட்டலாம் என்று யோசித்தால் தூக்கம் வரவில்லை. அது என் மூளைக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. என்னிடம் கவர்ச்சி இல்லை. பாலோயர்ஸ் ஏத்துவதற்கு ஏதேனும் ஐடியா இருந்தால் சொல்லுங்கள்” என்று தெரிவித்துள்ளார் ஷா ரா.

யூடியூப்பில் பிரபலமாகி பின்பு திரைத்துறைக்குள் நடிகராக அறிமுகமானவர் ஷா ரா. பல்வேறு படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது அவர் வெளியிட்டுள்ள இந்தப் பதிவை முன்வைத்து பலரும் இணையத்தில் விவாதிக்க தொடங்கியிருக்கிறார்கள்.

இன்ஸ்டாகிராம் பாலோயர்ஸ்களை முன்வைத்து  சம்பளம்: ஷா ரா வெளியிட்ட வேதனை பகிர்வு வைரல்
‘துரந்தர் 2’ படக்குழு மீது அதிருப்தியில் யஷ் - பின்னணி என்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in