தனுஷ் படத்துக்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்!

தனுஷ் படத்துக்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்!
Updated on
1 min read

சென்னை: தனுஷின் அடுத்த பட இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

‘கர’ படத்தினை முடித்துவிட்டு, ராஜ்குமார் பெரியசாமி படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் தனுஷ். இதன் படப்பிடிப்பு தொடங்குவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனை தனுஷ் மற்றும் ஆர் டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கவுள்ளன. இதன் நடிகர்கள் ஒப்பந்தம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதனிடையே, இப்படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த புதிய கூட்டணிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது.

இதில் மம்முட்டி, சாய் பல்லவி, கயாடு லோஹர் உள்ளிட்ட பலர் நடிக்கவிருப்பதாக தெரிகிறது. இன்னும் அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை என்றாலும், இதன் ஓடிடி உரிமையினை ஃநெட்ப்ளிக்ஸ் நிறுவனம் பெரும் விலை கொடுத்து வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in