சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்

சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்
Updated on: 
1 min read

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் ‘எஸ்கே 27’ படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்தத் தகவலை படத்தின் தயாரிப்பாளரான சத்யஜோதி பிலிம்ஸ் அதன் எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், ‘சாய்,  இசை, உணர்வு. சிவகார்த்திகேயனுடன் முதல் முறையாக இணைகிறார் சாய் அபயங்கர்.

‘எஸ்கே 27’ படத்துக்கு இசை அமைக்கிறார் சாய் அபயங்கர். இதுவரை கண்டிராத இசைத் திருவிழா உங்களுக்காக காத்திருக்கிறது’ எனத் தெரிவித்துள்ளது.

‘பார்க்கிங்’ படத்தினைத் தொடர்ந்து அதன் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், சிவகார்த்திகேயனின் படத்தினை இயக்க இருக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு தற்காலிகமாக ‘எஸ்கே 27’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் கயாடு லோஹர் நடிக்க இருக்கிறார். படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ‘சேயோன்’ படத்தில் நடித்து வருகிறார். சிவகுமார் முருகேசன் இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.  இதனிடையே கயாடு லோஹர், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மஞ்சணத்தி’ படத்திலும், சூர்யாவின் ‘சூர்யா 48’ படத்திலும் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்
‘பாட்ஷா’, ‘பேட்ட’ 2-ம் பாகம் உருவாகாதது ஏன்? - ரஜினி பகிர்ந்த ‘ஜெயிலர் 2’ அனுபவம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in