‘கருப்பு’ அப்டேட் குறித்து ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்ட வீடியோ வைரல்

‘கருப்பு’ அப்டேட் குறித்து ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்ட வீடியோ வைரல்
Updated on
1 min read

‘கருப்பு’ படத்தின் அப்டேட் குறித்து ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா, ஸ்வாசிகா, இந்திரன்ஸ், அனகா மாயா ரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கருப்பு’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஓடிடி உரிமம் இன்னும் விற்கப்படாமல் இருப்பதால், வெளியீட்டு தேதி இன்னும் முடிவாகாமல் இருக்கிறது.

இதனால் ஒவ்வொரு பண்டிகை காலத்திலும் போஸ்டரை மட்டும் வெளியிட்டு வந்தது படக்குழு. இதனிடையே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆர்.ஜே.பாலாஜி வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “‘கருப்பு’ படத்தின் அப்டேட்டுக்காக காத்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் ஒரு நற்செய்தி. இன்று பொங்கல் நல்வாழ்த்துகள் என்று போட்டு ஒரு போஸ்டர் வராது. தீபாவளி, பொங்கல், ரம்ஜான், குடியரசு தினம் என பல போஸ்டர்கள் விட்டுவிட்டோம். இன்று எந்தவொரு போஸ்டரும் வராது.

இன்னொரு நல்ல செய்தி அடுத்ததாக வெளியாகவுள்ள பாடலில் வெளியீடு குறித்த செய்தியுடன் மட்டுமே வெளியாகும். அது இல்லாமல் இனிமேல் எந்தவொரு விஷயமும் வெளியாகாது. எப்போது வெளியானாலும் ‘கருப்பு’ படம் அனைவருக்கும் பிடிக்கும். அதற்கான வேலைகள் தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அப்படம் வெளியாகும் போது அனைவரும் பிடிக்கும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார் ஆர்.ஜே.பாலாஜி. இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘கருப்பு’ அப்டேட் குறித்து ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்ட வீடியோ வைரல்
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விற்பனையான தனுஷ் படம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in