

ரியோ நடிப்பில் உருவாகும் ‘மேடி’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
’ராம் இன் லீலா’ என்ற படத்தினை முடித்துள்ளார் ரியோ. அதனைத் தொடர்ந்து அவரது அடுத்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. ‘மேடி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் இயக்குகிறார்.
ரோல் டைம் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் பூஜையில் சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜ் மற்றும் சிபி சக்கரவர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டுள்ளனர்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனத்தை பார்த்துக் கொண்டவர்தான் கலையரசு. தற்போது அவரே புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி ‘மேடி’ படத்தை தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க திட்டமிட்டுள்ளது படக்குழு.
இதில் சானிய ஐயப்பன், ஆர்.ஜே.விஜய், சிங்கம் புலி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் ரியோ உடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக பிரதீப் போத்தன், இசையமைப்பாளராக திபு நினன் தாமஸ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.