37 வருடங்​களுக்​குப் பிறகு வெளியாகும் ரஜினியின் இந்தி படம்!

37 வருடங்​களுக்​குப் பிறகு வெளியாகும் ரஜினியின் இந்தி படம்!
Updated on
1 min read

நடிகர் ரஜினி​காந்த், 80-களில் இந்​திப் படங்​களில் தொடர்ந்து நடித்து வந்​தார். 1989-ம் ஆண்டு அவர் நடிப்​பில் உரு​வான படம், ‘ஹம் மே ஷாஹென்ஷா கோன்’.

இதில் சத்​ரு​கன் சின்​ஹா, ஹேம​மாலினி, அனிதா ராஜ், பிரேம் சோப்​ரா, அம்​ரிஷ் புரி, ஜெகதீப் உள்​ளிட்ட பலர் நடித்​தனர். ஹர்​மேஷ் மல்​கோத்ரா இயக்​கி​னார்​.​ ராஜா ராய் தயாரித்த இந்​தப் படத்​துக்கு லட்​சுமி​காந்த்- பியாரிலால் இசையமைத்​தனர்.

சென்​சார் செய்​யப்​ப​டா​மல் இருந்த இப்​படம், இயக்​குநர் ஹர்​மேஷ் மல்​கோத்​ரா​வின் மறைவை அடுத்​துக் கிடப்​பில் போடப்​பட்​டது. இந்​நிலை​யில் 37 வருடத்​துக்​குப் பிறகு இப்படத்தை ஏப்ரலில் வெளி​யிட உள்​ளனர். தயாரிப்​பாளர் ராஜா ராய் இதுபற்றி கூறும்​போது, “இந்​தப் படத்​துக்​காக நாங்​கள் நம்​பிக்​கையை இழக்​க​

வில்​லை. அனைத்து சவால்​களுக்​கும் எதி​ராக இப்​படம் உயிர் பிழைத்​துள்​ளது” என்று குறிப்​பிட்​டுள்​ளார். நவீனத் தொழில்​நுட்​பத்​துக்கு ஏற்ப, ஆடியோ மற்​றும் காட்சி அனுபவத்தை மேம்​படுத்​தச் செயற்கை நுண்​ணறிவை (ஏ.ஐ) பயன்​படுத்​தி​ய​தாக இணைத் தயாரிப்​பாளர் அஸ்லாம் மிர்சா தெரி​வித்​துள்​ளார்.

37 வருடங்​களுக்​குப் பிறகு வெளியாகும் ரஜினியின் இந்தி படம்!
இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் அதிரடி: 2-வது டி20 ஆட்டத்தில் நியூஸியை வீழ்த்திய இந்தியா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in