

நாட்டார் மர்மக் கதையை மையப்படுத்தி உருவாகும் படத்தில் ரகுமான் ஜமீனாக நடிக்கிறார். இதை ‘விழா’ படத்தை இயக்கிய பாரதி பாலகுமாரன் இயக்குகிறார்.
‘சாம்பியன்’ விஷ்வா, மைம் கோபி, ஆடுகளம் நரேன், ரிஷா ஜாக்கோப்ஸ், முனீஷ்காந்த், அனுபமா குமார், பாபா பாஸ்கர், ரம்யா சுரேஷ் என பலர் நடிக்கின்றனர்.
கோமளா ஹரி பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் கோமளா ஹரிபாஸ்கரன் தயாரிக்கிறார்.
1980-களின் பின்னணியில் உருவாகும் இப்படத்தில், ‘அமானுஷ்ய’ சம்பவங்களால் பாதிக்கப்பட்ட தனது குடும்பத்தை காக்க முயற் சிக்கும் ஜமீன் கதாபாத்திரத்தில் ரகுமான் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.