

இயக்குநர் கணேஷ்குமாருடன் போஸ் வெங்கட், பிரேம்ஜி
பிரேம்ஜி அமரன் முதன்மை வேடத்தில் நடிக்கும் க்ரைம் த்ரில்லர் படத்தை சி. கணேஷ்குமார் இயக்குகிறார். இவர், ‘வல்லமை’, ‘நரி வேட்டை’ உள்ளிட்ட பல படங்களுக்கு படத்தொகுப்பாளராகப் பணியாற்றியவர். அபிராமி புரொடக் ஷன்ஸ் சார்பில் லாவண்யா அபிராமி தயாரிக்கும் இப்படத்தில் போஸ் வெங்கட், சஸ்திக், நயனா சாய் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
சிற்பி குமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படம் பற்றி இயக்குநர் கூறும்போது, “இளம்பெண் ஒருவரை யார் கொலை செய்தார்கள் என்பதை விவரிக்கும் க்ரைம் த்ரில்லர் படம் இது. முதன்மை வேடத்தில் நடிக்கும் பிரேம்ஜி அமரன், இசையும் அமைக்கிறார். தொடக்கம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது. போஸ்ட் புரொடக் ஷன் பணிகள் விரைவில் தொடங்க இருக்கின்றன” என்றார்.