

பிரபுதேவா- வடிவேலு இணைந்து நடிக்கும் படம் ‘பேங் பேங்’. இப்படத்தை சாம் ரோட்ரிக்ஸ் இயக்குகிறார். இதை, கேர்ஆர்ஜி கண்ணன் ரவி தயாரிக்கிறார். தீபக் ரவி இணைத் தயாரிப்பு செய்கிறார்.
பப்லு பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வேணு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். வித்தியாசமான ஜோம்பி வகை ஜானரில் உருவாகும் இப்படம், ஆக்ஷன், காமெடி மற்றும் ஹாரர் அம்சங்கள் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகி வருகிறது.
முன்னதாக வெளியான இப்படத்தின் டைட்டில் டீஸர் கவனத்தை ஈர்த்திருந்தது. அதில் ஜோம்பிகளால் சூழப்பட்ட சூழலில் பிரபு தேவா மற்றும் வடிவேலு துப்பாக்கியுடன் தோன்றிய காட்சிகள் வைரலாயின. ‘பிரபு வேலு’, ‘வடி தேவா’ போன்ற நகைச்சுவை கலந்த பெயர்கள் ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டின. இந்நிலையில், இந்தோனேசியாவின் மவுன்ட் புரோமோ எரிமலை பகுதியில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.